India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கல் பரிசுத் தொகுப்பு டோக்கன் வழங்க விடுமுறை தினமான கடந்த 10ஆம் தேதியும், பொங்கல் பரிசுத் தொகுப்பு அளிக்க விடுமுறை தினமான இன்றும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இந்த பணி நாள்களை ஈடுகட்ட வருகிற 15ஆம் தேதி மற்றும் 22ஆம் தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய நாட்களில் ரேஷன் கடைகள் திறக்கப்படாது, பூட்டப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
14 மாநிலங்களில் ஆண் வாக்காளர்களை விட, பெண் வாக்காளர்கள் அதிகமிருப்பது புள்ளி விவரம் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த 6ஆம் தேதியன்று இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதிலுள்ள புள்ளி விவரங்களில், ஆந்திரா, கேரளா, அசாம், அருணாச்சல், TN உள்ளிட்ட 14 மாநிலங்களில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகியுள்ளனர்.
விக்கிரவாண்டியில், கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட பள்ளியின் தாளாளர், முதல்வர் ₹5 லட்சம் வழங்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. இந்த வழக்கில் சிறையில் உள்ள பள்ளி தாளாளர், முதல்வர், வகுப்பாசிரியர் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறுமி லியா லட்சுமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ₹3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ADMK கவுன்சிலர்களை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுதலையானது, சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் <<15115542>>மா.சுப்பிரமணியன்<<>> கூறியுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2002இல் அதிமுக கவுன்சிலர்கள் தாக்கியதில் திமுக கவுன்சிலர்கள் தான் பலத்த காயமடைந்ததாக குறிப்பிட்டார். புனையப்பட்ட இந்த வழக்கால் 22 ஆண்டுகளாக கோர்ட் படிகளை ஏறும் நிலைக்கு ஆளானேன் என்றார்.
பெண்களுக்கு எதிராக குற்றங்களை தடுக்க 2025 குற்றவியல் திருத்த சட்டமுன்வடிவை பேரவையில் CM ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் 14 ஆண்டுகளுக்கு குறையாமலும், அதிகபட்சமாக ஆயுட்காலம் வரை கடும் தண்டனை அளிக்க இம்மசோதா வகை செய்கிறது. பாதிக்கப்பட்ட பெண் அடையாளத்தை வெளியிட்டால் 3- 5 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கவும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
தவெகவின் மாவட்ட செயலாளர்களாக நியமனம் செய்யப்பட உள்ள நபர்கள் இன்று இறுதி செய்யப்படுகின்றனர். தொடர்ந்து, ஒரு மனதாக தேர்வு செய்யப்படும் 100 மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் விரைவில் வெளியாக உள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்பு, இறுதி செய்யப்படும் மாவட்ட செயலாளர்கள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்களை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 2002இல் தொடரப்பட்ட இந்த வழக்கில் 22 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாட்சியம் அளித்தவர்கள் பிறழ்சாட்சியாக மாறியதாலும், சரிவர நிரூபிக்காததாலும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
12 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும், அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கவும், மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் ஆலோசகராக (mentor), தோனி நியமிக்கப்படலாம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அவர் ஏற்கெனவே 2021 T20 WC-ல் ஆலோசகராக இருந்துள்ளதால், அது உண்மையாக இருக்கலாம் என ரசிகர்கள் பலரும் நம்புகின்றனர். ஆனால், இதுகுறித்து BCCI தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை இல்லை. தோனி mentor ஆக வந்தால் இந்திய அணிக்கு பயனளிக்குமா?
எக்ஸ்ஸாமில் இருந்து தப்பிக்க பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த +2 மாணவனை போலீசார் கைது செய்தனர். கடந்த சில வாரங்களாக தலைநகர் டெல்லிக்கு தலைவலியாக இருந்த வெடிகுண்டு மிரட்டலை தீவிரமாக விசாரித்த போலீசார், சிறுவனை தற்போது கைது செய்துள்ளனர். இவர், இதுவரை 6 முறை இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்ததும், ஒரே முறை 23 பள்ளிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இத பத்தி உங்க கமெண்ட் என்ன?
Sorry, no posts matched your criteria.