India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் 4 என்கவுண்ட்டர்களை போலீசார் செய்துள்ளனர். இன்று புதுச்சேரி வழிப்பறி கொள்ளையன் விஜய், கடலூரில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். நேற்று மதுரையிலும் மூன்று தினங்களுக்கு முன் கம்பம் பகுதியிலும் என்கவுண்ட்டர் நடத்தப்பட்டது. அதேபோல, மார்ச் 28ஆம் தேதி செங்கல்பட்டில் ஒரு ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்டார்.
சம்மரில் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்சூட்டை அதிகரிக்கும் என்பதால் இறைச்சி வகைகள் குறிப்பாக சிக்கன், காடை வகைகளை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு வேளை உணவிலும் காய்கறிகள் இருப்பதை உறுதி செய்யுங்கள். தர்பூசணி போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பழங்களை உண்ணுங்கள். மோர், இளநீர், லெமன் ஜூஸ் உள்ளிட்ட பானங்களை அருந்துங்கள். கூல்ட்ரிங்ஸ், காஃபி, டீயில் இருந்து தள்ளியே இருங்கள்.
கடலூரில் போலீசை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற விஜய் என்ற வழிப்பறி கொள்ளையனை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர். தொலைதூரம் செல்லும் லாரி ஓட்டுநர்களை வழிமறித்து கொள்ளையடித்த 6 பேரில் விஜய்யும் ஒருவன். இன்று காலை போலீஸ் அவனை கடலூரில் கைது செய்ய முயன்றபோது, கோபி என்ற போலீசை தாக்கியிருக்கிறான். இதனையடுத்து, தற்காப்புக்காக போலீஸ் சுட்டதாக கூறப்பட்டுள்ளது.
வக்ஃபு திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்திய அரசமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களை பின்பற்ற உரிமை வழங்குகிறதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் 1995ம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் திருத்தம் செய்யும் ஒன்றிய அரசின் முடிவை திரும்பபெற வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 69 வயதான அவர், கராச்சியில் இருக்கும் ஒரு தனியார் ஹாஸ்பிடலில், காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர்கள் பலமுறை மருத்துவ பரிசோதனை செய்து அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட <<15966796>>வக்ஃபு <<>>மசோதாவில் 44 திருத்தங்கள் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக தணிக்கை அதிகாரம் மாநில அரசிடம் இருந்து மத்திய அரசுக்கு மாற்றம், 6 மாதங்களுக்கு ஒரு முறை வக்பு சொத்துகளின் விவரங்களை தெரிவிக்க வேண்டும், வக்ஃபு வாரியங்களில் இஸ்லாமியர்கள் அல்லாத 2 உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னையில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
கச்சத்தீவு தீர்மானம் தொடர்பான விவாதத்தில் தங்களை முழுமையாக பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் கச்சத்தீவை வைத்து திமுக நாடகம் நடத்தியதாக சாடினார். தேர்தலை வைத்து கச்சத்தீவு தீர்மானத்தை தற்போது திமுக கொண்டு வந்துள்ளதாகவும் இபிஎஸ் விமர்சித்தார். 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தீர்கள் எனவும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவை விவாகரத்து செய்ய அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் திருமணமாகி 4 மாதங்களே ஆகின்றன. தங்கக் கடத்தலில் நடிகை சிக்கி இருப்பதால் கணவர் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் கைதானது குறிப்பிடத்தக்கது.
வக்ஃப் வாரிய மசோதா மீதான விவாதத்தின்போது, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். திமுகவின் ஆர்.ராசா உள்ளிட்டோர் முழக்கமிட்டதை அடுத்து, தனது பேச்சை தொடர முடியவில்லை என ரிஜிஜு முறையிட்டார். அப்போது, எதிர்க்கட்சிகள் அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார். ஆனாலும், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.