News April 2, 2025
வெளிநடப்பு செய்தார் இபிஎஸ்

கச்சத்தீவு தீர்மானம் தொடர்பான விவாதத்தில் தங்களை முழுமையாக பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ் கச்சத்தீவை வைத்து திமுக நாடகம் நடத்தியதாக சாடினார். தேர்தலை வைத்து கச்சத்தீவு தீர்மானத்தை தற்போது திமுக கொண்டு வந்துள்ளதாகவும் இபிஎஸ் விமர்சித்தார். 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தீர்கள் எனவும் இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
Similar News
News January 24, 2026
குமரி : ரூ.6 செலுத்தினால், ரூ.1 லட்சம் – APPLY…!

குமரி மாவட்ட மக்களே.. போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News January 24, 2026
நீட் தேர்வு வேண்டாம்… PM மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

துணை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதை கைவிட வேண்டும் என PM மோடிக்கு CM ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை TN அரசு எதிர்த்து வரும் நிலையில், BPT, BOT படிப்புகளுக்கும் நீட் கட்டாயமக்கப்பட்டதை ஏற்க முடியாது எனவும் கூறியுள்ளார். இது ஏழைக் குடும்பங்களை நீட் பயிற்சிக்கு செலவழிக்க கட்டாயப்படுத்தும் செயல் என்றும் தெரிவித்துள்ளார்.
News January 24, 2026
பண மழை கொட்டும் 3 ராசிகள்

கேது பகவான் நாளை(ஜன.25) பூரம் நட்சத்திரத்தின் 2-வது பாதத்தில் இருந்து முதல் பாதத்திற்கு பெயர்ச்சி அடைவதால் 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதன்படி, *மேஷம்: வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க வாய்ப்புள்ளது. *கன்னி: குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் அகலும். நிதி நிலைமை மேம்படும். *தனுசு: சேமிப்பு உயரக் கூடும். வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.


