News April 2, 2025
‘கடத்தல் நாயகி’யிடம் இருந்து விவாகரத்து கோரும் கணவர்?

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கன்னட நடிகை ரன்யா ராவை விவாகரத்து செய்ய அவரது கணவர் ஜதின் ஹுக்கேரி தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் திருமணமாகி 4 மாதங்களே ஆகின்றன. தங்கக் கடத்தலில் நடிகை சிக்கி இருப்பதால் கணவர் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் கைதானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 20, 2026
தேசிய கீதம் இசைப்பதில் என்ன பிரச்னை? வானதி

கவர்னர் விவகாரத்தில் திமுக அரசு ஆதிக்க மனப்பான்மையையோடு நடப்பதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். தேசிய கீதம் இசைப்பதில் திமுகவுக்கு ஏன் பிடிவாதம் என கேட்ட அவர், தமிழ்த்தாய் வாழ்த்துக்கும், தேசிய கீதத்துக்கும் சம மரியாதை வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க திட்டமிட்டே முயற்சிகள் நடப்பதாகவும் கூறியுள்ளார்.
News January 20, 2026
மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

‘அன்புக்கரங்கள்’ திட்டம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் TN அரசு ₹2,000 வழங்குகிறது. 18 வயது நிறைவடையும் வரை தொகை வழங்கப்படுவதோடு, உயர்கல்விக்கும் அரசு உதவி செய்யும். பெற்றோர் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் நோய்களுடன் வாழ்ந்தாலோ (அ) மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலோ கூட இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். தாலுகா ஆபீஸை அணுகுங்கள். SHARE.
News January 20, 2026
சூடுபிடிக்கும் தங்கம் திருட்டு வழக்கு: 21 இடங்களில் ரெய்டு

<<18345270>>சபரிமலையில்<<>> தங்கம் திருடப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகம், கேரளா, பெங்களூருவில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்புடைய 21 இடங்களில் ED அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். இதில், சென்னையில் தங்க முலாம் பூசும் நிறுவனம் தொடர்புடைய 6 இடங்களில் ED ரெய்டு நடைபெற்று வருகிறது.


