News April 11, 2024

தேர்தலில் 3வது தீய சக்தியாக ஒரு கூட்டணி

image

தேர்தலில் 3வது தீய சக்தியாக ஒரு கூட்டணி அமைந்துள்ளது; மதவாத, மத வெறியை தூண்டும் கட்சியாக, மத அடிப்படையில் செயல்படும் கட்சியாக பாஜக உள்ளது என்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விமர்சித்துள்ளார். அதிமுக உடன் ஒப்பிடும்போது திமுக கூட்டணியில் மனிதநேயம், செயல்திறன் அதிகமாக உள்ளது. வரும் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் அபார வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

News April 11, 2024

ஊழலுக்கு குட்பை சொல்லுங்கள்

image

2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மூலம் ஊழலுக்கு மக்கள் குட்பை சொல்ல வேண்டுமென பாஜக தலைவர் ஜேபி நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். சிக்கிமில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சிக்கிமுக்கு வளர்ச்சி, அமைதி, உள்கட்டமைப்பு வசதி, வளர்ச்சியை பாஜக அரசு கொடுக்கும் என்றும், ஆதலால் தேர்தலில் ஊழலுக்கு குட் பை சொல்லிவிட்டு, தாமரையை மலர விட வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

News April 11, 2024

இபிஎஸ்சை தாக்கிய அண்ணாமலை

image

இபிஎஸ் ரோடு ஷோ சென்றால், அதில் எத்தனை பேர் வருவார்கள் என அண்ணாமலை கடுமையாக தாக்கினார். பழைய பஞ்சாங்கத்தையே இன்னும் இபிஎஸ் பேசி வருகிறார். அவர் வாகனப் பேரணி சென்றால் யாரும் வரமாட்டார்கள் என்பது அவருக்கே தெரியும். வேண்டுமென்றால் அதிமுகவினர் ரோடு ஷோ நடத்திக் காட்டட்டும் என்று சவால் விடுத்த அவர், பிரதமர் மோடி நடத்தியது ரோடு ஷோ அல்ல, மக்கள் தரிசன யாத்திரை என்று தெரிவித்தார்.

News April 11, 2024

சமூக விரோதிகளை பாஜகவில் இருந்து நீக்கிவிட்டால்…

image

சமூக விரோதிகளை பாஜகவில் இருந்து நீக்கிவிட்டால், அக்கட்சியில் ஆட்களே இருக்க மாட்டார்கள் என்று தமிழக அமைச்சர் TRB ராஜா கூறியுள்ளார். கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட அவர், “பாசிச சிந்தனைக்கு எதிராக போராடும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக வாக்கு கேட்டு படித்த இளைஞர்கள் தன்னார்வத்துடன் எல்லா பகுதிகளிலும் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என்றார்

News April 11, 2024

விதித் குஜராத்தி அபார வெற்றி

image

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 6ஆவது சுற்றுப் போட்டியில், இந்திய வீரர் விதித் குஜராத்தி அபார வெற்றி பெற்றுள்ளார். பிரெஞ்சு வீரர் அலிரேசா ஃபிரோஸ்ஜாவுக்கு எதிரான இப்போட்டியில், விதித் தொடக்கம் முதலே தனது உத்திகளை சரியாக செயல்படுத்தி வந்தார். இதனால், 40ஆவது நகர்த்தலில், பிரெஞ்சு வீரர் தோல்வியை தழுவினார். அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவுக்கு எதிரான மற்றொரு போட்டியில், தமிழக வீரர் குகேஷ் டிரா செய்துள்ளார்.

News April 11, 2024

நடிகர் ராம் சரணுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

image

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நடிகர் ராம் சரண் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். ஏப்.13ஆம் தேதி நடைபெறும் இவ்விழாவில், அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. 2022ஆம் ஆண்டு வெளியான ‘RRR’ படம் இவருக்கு பான் இந்தியா அந்தஸ்த்தை வழங்கிய நிலையில், அவரது கலை சேவையை பாராட்டி அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் டி.ஜி.சீத்தாராம் இந்த பட்டத்தை வழங்குகிறார்.

News April 11, 2024

திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

image

வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பரிந்துரைதர ஆணையத்திற்கு வழங்கிய காலக்கெடு முடிந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இடஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு; போராடித்தான் வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாமக தயார் என எச்சரித்துள்ளார்.

News April 11, 2024

தேர்தல் களத்தின் முக்கியப் பிரச்னைகள் இவைதாம்!

image

தேர்தலில் முக்கியப் பிரச்னைகளாக வேலைவாய்ப்பின்மையும், விலைவாசி உயர்வும் இருப்பதாக CSDS-LokNiti நடத்திய தேர்தலுக்கு முந்தைய சர்வேயில் தெரியவந்துள்ளது. அதன் அறிக்கையில், விலைவாசி உயர்வைப் பொருத்தவரை 71% பேர் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளனர். வேலை வாய்ப்பின்மைக்கு மாநில அரசுகளே காரணம் என 17% பேரும், மத்திய அரசுதான் காரணம் என 27% பேரும் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது

News April 11, 2024

உருவ கேலிக்கு ஆளானதாக பிரபல நடிகை வேதனை

image

உருவ கேலிக்கு ஆளானதாக நடிகை அபிராமி வேதனை தெரிவித்துள்ளார். விருமாண்டி, வானவில், சமுத்திரம், தோஸ்து உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள அவர், தாம் உருவ கேலிக்கு ஆளான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “உயரமாக இருப்பதாக நான் உருவ கேலி செய்யப்பட்டேன். இதனால் பட வாய்ப்புகளும் பறி போனது. எனது தாடை மிக நீளமாக இருப்பதாகக் கூறி, இழுத்து பார்த்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

News April 11, 2024

இந்துக்கள் புத்த மதத்துக்கு மாற அனுமதி பெறுவது அவசியம்

image

புத்த மதத்துக்கு இந்துக்கள் மாற முன் அனுமதி பெறுவது அவசியம் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது. தலித்துகள் புத்த மதத்துக்கு மாறும் நிகழ்வுகள் அடிக்கடி நடப்பது குறித்து கவனத்துக்கு வந்ததையடுத்து, குஜராத் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், புத்தம், சீக்கியம், ஜைனம் ஆகியவை தனி மதங்கள், அதற்கு மாற மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!