News May 15, 2024
தோனிக்கு மிகவும் பிடித்த இடம் எது தெரியுமா?

தனக்கு மிகவும் பிடித்த இடம் அமெரிக்காவில் உள்ள ‘நியூ ஜெர்ஸி’ நகரம் தான் என CSK வீரர் தோனி தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம், உங்களுக்கு எந்த இடம் மிகவும் பிடிக்கும்? என தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு நியூ ஜெர்ஸி என பதிலளித்த அவர், தனது நண்பர்கள் நிறைய பேர் அங்கு இருப்பதாகவும், அவர்களுடன் கோல்ஃப் விளையாடுவதும், சாப்பிடுவதுமாக இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News December 7, 2025
44 ஆண்டுகளுக்கு பிறகு..

ரஜினி மீசையில்லாமல் கிளீன் ஷேவ் லுக்கில் நடித்த படம் எதுவென கேட்டால், ‘தில்லுமுல்லு’ என ஈசியாக சொல்லிவிடலாம். இந்த படம் வெளியாகி 44 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ரஜினி அது போன்ற லுக்கில் தோன்றவுள்ளாராம். கமல் தயாரிப்பில் ‘பார்க்கிங்’ ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தில் கிளீன் ஷேவ் லுக்கில் ரஜினி நடிக்கவுள்ளாராம். காமெடி ஜானரில் இந்த படம் உருவாகும் எனவும் கூறப்படுகிறது.
News December 7, 2025
அம்பேத்கர் பின்னால் ஒளியும் திருமா: பாமக பாலு

தனக்கு ஆபத்து வரும்போது பட்டியல் சமூகம், அம்பேத்கர் பின்னால் திருமா ஒளிந்துகொள்கிறார் என பாமக பாலு விமர்சித்துள்ளார். தன்னை சமூகநீதி காப்பாளராக திருமா கூறிக்கொள்கிறார் எனவும் ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில் திமுக கூட்டணியில் இருக்கும் அவர் வாய்மூடி மௌனியாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், TN-ல் அம்பேத்கருக்கு புகழஞ்சலி செலுத்த தகுதியான கட்சி பாமக தான் எனவும் கூறியுள்ளார்.
News December 7, 2025
வயசானாலும் Performance-ல் குறைவைக்காத Ro-Ko!

2027 WC தொடரின் போது, Ro-Ko இருவரும் 40 வயதை நெருங்குவார்கள் என்பதால், இளம் வீரர்களுக்கு வழிவிடலாம் என்ற விமர்சனம் உள்ளது. ஆனால், SA-வுக்கு எதிரான ODI தொடரில் அதிக ரன்கள், அதிக பவுண்டரிகள், அதிக சிக்ஸர்கள், தொடர் நாயகன் விருதை வென்றது கோலி. முன்னதாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் இவை அனைத்தும் ரோஹித் வசம் இருந்தது. பெர்பார்மென்ஸில் குறைவைக்காத அவர்களின் கனவுக்கு வழிவிடலாம் அல்லவா?


