News August 2, 2024

THE GOAT படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

image

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள THE GOAT படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்னும் 34 நாட்களே உள்ளன” என்று பதிவிட்டுள்ளார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்திலான இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் இரு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் செப்., 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Similar News

News November 28, 2025

மிகவும் விலையுயர்ந்த 10 வீடுகள்

image

இந்தியாவின் பல முன்னணி தொழிலதிபர்கள் மிகப்பெரும் செலவில் அழகான, பிரமாண்டமான வீடுகளை கட்டியுள்ளனர். அவர்களில் யாரெல்லாம் மிகவும் விலையுயர்ந்த வீடுகளை வைத்துள்ளனர்? அந்த வீடுகள் எங்கு அமைந்துள்ளன? அவற்றின் மதிப்பு எவ்வளவு? இந்த தகவல்களை எல்லாம் மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொரு படமாக ஸ்வைப் செய்து பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். SHARE

News November 28, 2025

காற்றுமாசு விவகாரத்தில் மோடி மௌனம் சரியா? ராகுல் காந்தி

image

டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தங்கள் குழந்தைகள் விஷக்காற்றை சுவாசித்து வருவதாக ஒவ்வொரு தாய்மாரும் வேதனைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். குழந்தைகள் மூச்சுத்திணறலால் துடிக்கும் போது மோடி அமைதியாக இருப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் அரசு ஏன் எந்த அவசர நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாடியுள்ளார்.

News November 28, 2025

புயல் அலர்ட்: 10 மாவட்டங்களில் அடைமழை வெளுக்கும்

image

டிட்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு CM ஸ்டாலினும் அறிவுறுத்தியுள்ளார். ஆகையால், பாதுகாப்பாக இருங்கள் மக்களே!

error: Content is protected !!