News August 2, 2024
THE GOAT படத்தின் புதிய போஸ்டர் வெளியானது!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள THE GOAT படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “இன்னும் 34 நாட்களே உள்ளன” என்று பதிவிட்டுள்ளார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்திலான இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் இரு வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம் செப்., 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Similar News
News July 5, 2025
PM KISAN: வங்கி கணக்கில் ₹2000 எப்போது?

நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பு PM KISAN திட்ட தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என்பதுதான். ஜூனில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், ஜூலை 18 அன்று பிஹாரின் மோட்டிஹரி பகுதியில் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில், பண வரவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
News July 5, 2025
கண் பார்வைக்கு கேரட்டை விட இது பெஸ்ட்

கண் பார்வைக்கு இந்த 5 உணவுகளை நீங்கள் உணவில் சேர்ந்தால் போதும் மக்களே. *எல்லா வகையான கீரைகளும் கண்ணுக்கு நல்லது *மத்தி உள்ளிட்ட கொழுப்பு அதிகமுள்ள மீன்களை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும் *நட்ஸ் பார்வையை மேம்படுத்த உதவும் *கட்டாயம் உங்கள் உணவில் முட்டையை சேர்க்க வேண்டும் *ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் கொண்ட உணவுகள் கண்ணுக்கு சிறந்தது. நல்லா சாப்பிடுங்க கண் பத்திரம்…
News July 5, 2025
தூத்துக்குடியை தொடர்ந்து சோளிங்கரிலும் விடுமுறை!

ஜூலை 7-ம் தேதி திங்கள்கிழமை அன்று <<16943415>>தூத்துக்குடி<<>> மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. யோக ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.