News June 14, 2024

தேர்தல் அதிகாரிகளை மிரட்டி வென்றுள்ளது பாஜக: ராவத்

image

தோல்வியடைந்த 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகளை மிரட்டி பாஜக வென்றுள்ளதாக உத்தவ் தாக்கரேயின் சிவசேனா பிரிவு மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஜனநாயகத்தில் மக்கள்தான் கடவுள் என்றும், அந்தக் கடவுள் பாஜகவை பார்த்து கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். ராமர் வாழ்ந்த இடங்களில் எல்லாம் பாஜக தோல்வி அடைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

News June 14, 2024

சிறையில் பாலாஜி: திமுகவுக்கு பாதிப்பா? இல்லையா?

image

பணமோசடி வழக்கில் 2023 ஜுன் 14இல் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதனால் அவரின் சொந்த மாவட்டமான கரூர், அதன் அண்டை மாவட்டங்களில் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், மக்களவைத் தேர்தலில் கரூர், அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் திமுக அனைத்து தொகுதிகளிலும் வென்றுள்ளது. இதை சுட்டிக்காட்டி, அவர் சிறையில் இருந்தாலும் திமுகவுக்கு பாதிப்பில்லை என அக்கட்சியினர் கூறுகின்றனர்.

News June 14, 2024

ஆகஸ்ட் மாதம் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ தொடக்கம்

image

மாணவிகள் போல் மாணவர்களுக்கும் மாதம் ₹1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன் திட்டம்’ ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் நடந்த ஐம்பெரும் விழாவில் பங்கேற்ற அவர், அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்பட உள்ளதாக கூறினார். தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது புதுமைப்பெண் திட்டத்தை பலரும் பாராட்டியதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

News June 14, 2024

மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை

image

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர். மறுவாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் மனு அளித்திருந்தார். இந்நிலையில், விரிவான தேர்தல் முடிவுகள் குடியரசுத் தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டதால், ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது என விளக்கமளித்தனர். தேர்தல் ஆணையமே விரும்பினாலும் அது முடியாது என்றும் அவர்கள் கூறினர்.

News June 14, 2024

இந்தியன் பட ரீ ரிலிசுக்கு வரவேற்பில்லை

image

சங்கர் இயக்கி கமல் நடித்து வெளியான இந்தியன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து இந்தியன் 2, இந்தியன் 3 படங்கள் எடுக்கப்பட்டு ரீலிசுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் இந்தியன் படம் அண்மையில் ரீ ரிலிஸ் செய்யப்பட்டது. ஆனால் மற்ற படங்களுக்கு கிடைத்தது போல இந்தியன் பட ரீ ரிலிசுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை எனவும், திரையரங்குகள் வெறிச்சோடி இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News June 14, 2024

சுப்பையா கொலை வழக்கில் அனைவரும் விடுதலை

image

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நிலப்பிரச்னை தொடர்பாக சென்னையை சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சுப்பையா 2013இல் வெட்டிக் கொல்லப்பட்டார். இதில், 7 பேருக்கு மரண தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில், அனைவரையும் விடுவித்து ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

News June 14, 2024

ஆணவத்தால் BJPக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை: RSS தலைவர்

image

கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்போடு பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ள நிலையில், பாஜகவின் ஆணவத்தால் தான், அக்கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என RSS மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், ராமர் பக்தர்களாக இருந்தவர்கள் ஆணவம் மிக்கவர்களாக மாறியதால், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், பாஜகவை 241 இடங்களிலேயே ராமர் நிறுத்திவிட்டார் என அவர் விமர்சித்துள்ளார்.

News June 14, 2024

மசாலாவில் பூச்சிகொல்லி: ஆய்வில் அதிர்ச்சி

image

இந்திய மசாலா பொருட்களில், பூச்சிக்கொல்லிகள் சேர்க்கப்படுவதால் பல நாடுகள் அவற்றை தடை செய்துள்ளன. இந்த நிலையில், ராஜஸ்தான் அரசு பிரபல நிறுவனங்களின் மசாலா பொருள்களை ஆய்வுக்குட்படுத்தியதில் எவரெஸ்ட், MDH நிறுவனங்களின் மசாலா பொருட்களில் அதிகளவு பூச்சிக்கொல்லிகள் சேர்க்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கக்கோரி FSSAI-க்கு அம்மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது.

News June 14, 2024

தொடக்க ஆட்டக்காரராக தடுமாறுகிறாரா கோலி

image

ஐபிஎல்லில் 741 ரன் சேர்த்ததால், டி20 WC போட்டியில் கோலி மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் 3ஆவது வீரராக களமிறங்கும் கோலி, இத்தொடரில் ரோஹித்துடன் முதலில் களமிறக்கப்பட்டார். ஆனால், 3 போட்டிகளில் அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில் ஒருமுறை டக் அவுட் ஆகியுள்ளார். எனவே தொடக்க ஆட்டக்காரராக கோலி தடுமாறுகிறாரோ என்ற எண்ணம் ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

News June 14, 2024

T20WC: வெளியேறிய முன்னணி அணிகள்

image

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து, இலங்கை அணி நேற்று வெளியேறியது. அதனைத் தொடர்ந்து இன்றைய போட்டியில் PNG அணியை AFG அணி வீழ்த்தியதால், நியூசிலாந்து வெளியேறியது. பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணியும் அடுத்த அணிகளின் தோல்வியை எதிர்பார்த்து மதில்மேல் பூனையாக நின்று கொண்டிருக்கின்றன. இதனால், இந்த உலகக் கோப்பை முன்னணி அணிகளுக்கு சோதனை தரும் விதமாக அமைந்துள்ளது.

error: Content is protected !!