News May 2, 2024
உமா ரமணன் உடல் தகனம்

உடல்நலக் குறைவால் காலமான, தமிழ் சினிமா பின்னணி பாடகி உமா ரமணின் உடல் தகனம் செய்யப்பட்டது. MSV, இளையராஜா உள்ளிட்டோரின் இசையில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர் உமா ரமணன். சென்னை அடையாறில் வசித்து வந்த அவர், நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
Similar News
News December 15, 2025
ALERT: இந்த வயதினருக்கு திடீர் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு

இந்தியாவில் 45 வயதுக்கு குறைந்தவர்களின் திடீர் மரணங்களில், மாரடைப்புதான் முதன்மையான காரணம் என Indian Journal of Medical Research தெரிவித்துள்ளது. இதில் பலர் வெளிப்புறத்தில் ஆரோக்கியமாக உள்ளனர். ஆனால், அதீத மன அழுத்தம், குறைவான தூக்கம், புகை–மது பழக்கம், அதிக சர்க்கரை, போதிய உடலுழைப்பு இல்லாமை, High BP, கண்டறியப்படாத இதய கோளாறுகள் ஆகியவையே திடீர் மாரடைப்புகளுக்கு காரணங்களாக அமைந்துள்ளது. உஷார்..!
News December 15, 2025
அதிமுகவில் போட்டா போட்டி போட்டு விருப்பமனு!

2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியது. முதல் நாளில் Ex அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலர் விருப்பமனு வாங்கிச் சென்றனர். அதேபோல், பல நிர்வாகிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிக்காக ஆர்வமுடன் மனுவை வாங்கிச் சென்றனர். சிலர், MGR, ஜெயலலிதாவின் வேடமணிந்து வந்து விருப்பமனு பெற்றுச் சென்றனர்.
News December 15, 2025
பங்குச்சந்தைகள் ராக்கெட் வேகத்தில் மீளும்: ரகுராம் ராஜன்

இந்தியா மீதான USA-வின் 50% வரி விதிப்பு நியாயமாக இல்லை என ரகுராம் ராஜன் கூறியுள்ளார். அது 20%-க்கு குறைவாக இருந்திருக்க வேண்டும் எனவும், USA உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்திய சந்தைகள் ராக்கெட் வேகத்தில் மீளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பொருளாதார வல்லுநரான ரகுராம் ராஜன், 2016-ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து RBI கவர்னர் பதவியை ராஜினாமா செய்தவர்.


