News May 2, 2024
இன்று ஒரே நாளில் 417 வழக்குகள் பதிவு

சென்னையில் வாகனங்களின் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 471 வழக்குகள் பதிவு செய்துள்ளது போக்குவரத்துக் காவல்துறை. இதில் 121 போலீஸ் வாகனங்களும் அடக்கம். முதல்நாளில் பிடிபட்டோருக்கு ரூ.500 அபராதம் விதித்து அறிவுரை வழங்கிய போலீசார், அடுத்த முறை பிடிபட்டால் ரூ.1,500 அபராதம் விதிக்கப்படுமென எச்சரித்து அனுப்பினர். வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டத் தடை இன்று அமலுக்கு வந்தது.
Similar News
News December 14, 2025
சற்றுமுன்: அதிமுகவில் இணைந்தனர்

சென்னையில் EPS முன்னிலையில், தவெக, விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு கட்சித் துண்டு போர்த்தி EPS வரவேற்றார். அதிமுக ராஜ்ய சபா MP தனபால் ஏற்பாட்டில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. தேர்தல் பணிகளில் ஆர்வமுடன் பங்கெடுத்து அதிமுக வெற்றிக்கு உழைக்கும்படி, புதியதாக இணைந்தவர்களுக்கு EPS வேண்டுகோள் விடுத்தார்.
News December 14, 2025
மகளிர் உரிமைத் தொகை உயர்வு: ஸ்டாலின் அறிவிப்பு

மகளிர் உரிமைத்தொகை மேலும் உயரும் என கூறியிருந்தேன், அது நிச்சயமாக நடக்கும் என மீண்டும் CM ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்துள்ளார். டிச.12-ல் ₹1,000 மகளிர் உரிமைத்தொகை 2-ம் கட்ட விரிவாக்க நிகழ்வில் பேசிய ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகையும் உயரும், மகளிரின் உரிமையும் உயரும் என கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் ஒருமுறை அழுத்தமாக கூறியுள்ளதால் மிக விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
News December 14, 2025
குளிர்காலத்தில் இந்த சூப்களை டிரை பண்ணுங்க

சூப் குடிப்பதால் செரிமானம் மேம்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து போன்ற பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகின்றன. குளிர்காலங்களில் சூப் குடிப்பது, உடலை இதமாக வைத்திருக்க உதவும். பலவகையான சூப்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் உங்களுக்கு மிகவும் பிடித்த சூப் எது? கமெண்ட்ல சொல்லுங்க.


