News May 2, 2024

ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று யாருமில்லை

image

இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு யாரும் மாற்றாக வர முடியாதென இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அஜித் அகர்கர் புகழாரம் சூட்டியுள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘துணைக் கேப்டன் தொடர்பாக எதுவும் ஆலோசிக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணியை அவர் சிறப்பாக வழிநடத்தி வெற்றிப்பெற வைத்துள்ளார். பந்துவீச்சிலும் பாண்டியா தனது திறமையை வெளிப்படுத்துவார்’ என்றார்.

Similar News

News December 14, 2025

கள்ளக்குறிச்சி: சிறுமியை நூதன முறையில் ஏமாற்றி 3 பவுன் நகை பறிப்பு!

image

கள்ளக்குறிச்சி: கரடி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் (35), தனது மனைவியுடன் நேற்று வேலைக்கு சென்றுவிட்டார். மகள் கீர்த்தனா (12) மட்டும் தனியாக இருந்த போது, வந்த மர்மநபர் அம்மா கடன் தொகையை பீரோவில் வைத்துள்ளார், எடுத்து கொடு என கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி, பீரோ சாவியை அவரிடமே கொடுத்த நிலையில், 3 பவுன் நகையை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 14, 2025

சளியை கரைக்கும் சிம்பிள் கஷாயம்

image

சளி வாட்டும்போது அதில் இருந்து வெளியேற, மாத்திரைகளை தேடிச் செல்வதே பலரின் வழக்கம். ஆனால் சிம்பிளான கஷாயம் மூலம் சளியை கரைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு 2 கிளாஸ் தண்ணீரில், கிராம்பு -3, மிளகு -3, சுக்குப் பொடி – கால் ஸ்பூன், மஞ்சள் பொடி – 2 சிட்டிகை, பிளாக் சால்ட் – 2 சிட்டிகை, நா.சர்க்கரை – 1 ஸ்பூன் ஆகியவற்றை போட்டு கொதிக்கவிடுங்கள். அதை 1 டம்ளராக சுண்ட வைத்தால் கஷாயம் ரெடி.

News December 14, 2025

மனம் கொத்திப் பறவையாக மாறிய அனுபமா பரமேஸ்வரன்

image

சமீபத்தில் வெளியான ‘பைசன்’ படத்தில் தனது தேர்ந்த நடிப்பால் தமிழ் ரசிகர்கள் மனங்களில் அழுத்தமாக பதிந்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன். இந்நிலையில், தனது பார்வையாலேயே இதயங்களை கொள்ளை கொள்ளும் தேவதையாக வலம் வரும் அனுபமாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகியுள்ளன. இளைஞர்களின் நெஞ்சங்களை கொத்தி செல்லும் அவரின் போட்டோஸை மேலே SWIPE செய்து கண்டு ரசியுங்கள்.

error: Content is protected !!