India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை-குஜராத் இடையேயான 7ஆவது ஐபிஎல் போட்டி, இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க உள்ளது. இதில் டாஸ் வென்ற GT அணி கேப்டன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியதில், CSK -2, GT -3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணியே புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.பி. ரன்வீத் சிங் பிட்டு சற்றுமுன் பாஜகவில் இணைந்தார். லூதியானா எம்.பியான இவர், அம்மாநில முன்னாள் முதல்வர் பியாந்த் சிங்கின் பேரன் ஆவார். காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவராக செயல்பட்டிருக்கும் பிட்டு, காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாகவும் இருந்தார். இந்நிலையில், திடீரென அவர் பாஜகவுக்கு தாவியிருப்பது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கள்ளக்கூட்டணி யார் வைத்துள்ளனர் என்பது மக்களுக்கு தெரியுமென அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மோடியுடன் ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தை காட்டி பிரசாரம் மேற்கொண்ட இபிஎஸ், ‘திமுக ஆட்சியில் ஒரு புயலையே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதிமுக ஆட்சியில் பல புயல்களை எதிர்கொண்டோம். கனமழையால் தூத்துக்குடி மிதந்து கொண்டிருந்த போது டெல்லிக்கு சென்றவர் ஸ்டாலின்’ என்றார்.
மக்களவைத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் ரூ. 3.28 கோடிக்கு சொத்துக்கள் உள்ளதாக பிரமாணப் பாத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தங்கம் மற்றும் வைப்புத் தொகை என ரூ. 1.93 கோடிக்கு அசையும் சொத்துக்கள், ரூ. 2.35 கோடிக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழிசையின் சொத்து மதிப்பு ரூ. 21.54 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது.
CUET UG தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், 5 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர இந்த நுழைவுத் தேர்வு அவசியமாகும். CUET தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இங்கே <
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 9.3 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 4,107 மையங்களில் இத்தேர்வுகள் நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெற்ற தமிழ் மற்றும் இதர மொழி தேர்வை 17,633 பேர் எழுதவில்லை என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில், மஜக 5 தொகுதிகள் கேட்ட நிலையில் 3 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாண்டியா தொகுதியில், குமாரசாமியின் மகன் நிகில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தானே போட்டியிடுவதாக குமாரசாமி அறிவித்துள்ளார். மற்ற 2 தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் RCB போட்டியின் டிக்கெட் விலையை பார்த்து, ரசிகர்கள் திகைத்து போயுள்ளனர். டிக்கெட்டுகளின் எண்ணிக்கை குறைய குறைய கட்டணம் உயரும் நடைமுறை பின்பற்றப்படுவதால், P2 ஸ்டாண்டின் ஒரு டிக்கெட் ரூ.55,055-க்கு விற்பனை செய்யப்படுகிறது. குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.5,200 ஆகும். இது ஐபிஎல் தொடரில் இதுவரை விற்பனை செய்யப்பட்ட மிக விலையுயர்ந்த டிக்கெட்டுகளில் ஒன்றாகும்.
கோவையில் அண்ணாமலை 60% வாக்குகள் பெற்றால் அரசியலில் இருந்தே விலகிக் கொள்கிறேன் என்று அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பேசியுள்ளார். கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவான வாக்கு வங்கியை வைத்திருக்கிறது. ஆனால், கோவையில் பாஜகவுக்கும் செல்வாக்கு அதிகம் இருப்பதால் அதிமுக, பாஜக இடையே காரசாரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், பாஜக தங்களுக்கு போட்டியே இல்லை என்று ராமச்சந்திரன் பேசியிருக்கிறார்.
புனித வெள்ளி (மார்ச் 29), சனி, ஞாயிறு என தொடர் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மார்ச் 28 இல் 505, மார்ச் 29 இல்300, மார்ச் 30 இல் 345 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு மார்ச் 28,29,30 ஆகிய தேதிகளில் 120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.