News May 14, 2024
காஷ்மீர் மக்களை பாராட்டிய பிரதமர் மோடி

ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் முன்பை விட சிறப்பாக வாக்களித்து ஊக்கம் அளித்ததற்காக அவர்களைப் பாராட்ட விரும்புவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் மூலம், மக்களின் ஊக்கம் மற்றும் திறன்களின் முழுமையான வெளிப்பாட்டைக் காண முடிந்ததாகக் கூறிய அவர், இது ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் மிகவும் நல்லது எனக் கூறியுள்ளார்.
Similar News
News December 12, 2025
டிசம்பர் 12: வரலாற்றில் இன்று

*1911 – இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவில் இருந்து தில்லிக்கு மாற்றப்பட்டது. *1911 – UK-ன் 5-ம் ஜார்ஜ் மன்னர் இந்தியாவின் பேரரசராக முடிசூடினார். *1931 – நடிகை சௌகார் ஜானகி பிறந்தநாள். *1950 – நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள். *1970 – இயக்குநர் சேரன் பிறந்தநாள். *1981 – கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிறந்தநாள்.
News December 12, 2025
சூப்பர் ஸ்டார் பிறந்தநாளில் சூப்பர் அப்டேட் வருமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இன்று பிறந்தநாள். இதை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ள அவரது ரசிகர்கள், சில எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கின்றனர். ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் சிறப்பு போஸ்டர் அல்லது வீடியோ வெளியாகுமா என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேபோல், கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தின் அறிவிப்பு, இயக்குநர் பெயர் அறிவிக்கப்படுமா என்றும் ஏங்கி தவித்து வருகின்றனர்.
News December 12, 2025
Zoho-க்கு மாறிய மத்திய அரசின் இமெயில்கள்

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளைச் சேர்ந்த 12.68 லட்சம் இமெயில்கள், Zoho நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதில் 7.57 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு சொந்தமானவை. இந்த முக்கிய மின்னஞ்சல் மாற்றம், தேசிய தகவல் மையத்தின் (NIC) வழியாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மின்னஞ்சல் பரிமாற்றங்களின் தரவுகள், அறிவுசார் சொத்துரிமையின் உரிமை அரசிடமே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.


