News May 13, 2024
பள்ளிக் கல்வித்துறையின் புதிய முயற்சி

Department of School Education என்ற பெயரில் புதிய தளம் ஒன்றை பள்ளிக் கல்வித்துறை தொடங்க உள்ளது. பெற்றோருக்கும், பள்ளிக்கும் இடையிலான தகவல் தொடர்பை எளிதாக்கவும், வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யவும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலம் ஒருமுறை தகவல் அனுப்பினால், பதிவு செய்யப்பட்ட ஒரு கோடி தொலைபேசி எண்களின் வாட்ஸ்-அப்பிற்கு செல்லும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
ராசி பலன்கள் (11.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 10, 2025
பெற்றோர்களே இதை கவனியுங்க!

குழந்தைகளிடையே சமூக ஊடகங்களின் பயன்பாடு, அவர்களை வெகுவாக பாதிக்கும் என்று ஸ்வீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. அவர்களால் நீண்ட நேரம் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும் என்றும், ADHD போன்ற அறிகுறிகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது. மேலும், குழந்தைகளின் திரை நேரத்தைக் குறைப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிக்கை பரிந்துரைக்கிறது.
News December 10, 2025
செல்போன் ரீசார்ஜ் கட்டணம் உயர்கிறது

செல்போன் ரீசார்ஜ் கட்டணங்கள் மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, 15% வரை கட்டணம் உயரலாம் என கூறப்படுகிறது. இதன்படி, பரவலாக பயன்படுத்தப்படும் 28 நாள்கள் வேலிடிட்டியுடன் கூடிய ₹299 பேக், ₹50 அதிகரிக்க வாய்ப்புள்ளதாம். இது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும். கடந்த நவம்பரில், முன்னணி நிறுவனங்கள் தங்களது ப்ளானில் ₹10- 200 வரை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


