India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் அறிவித்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பட்டியல்: ▶தனுஷ்-ஐஸ்வர்யா, ▶சமந்தா-நாக சைதன்யா, ▶அமலா பால் -ஏ.எல்.விஜய், ▶செல்வராகவன்-சோனியா அகர்வால், ▶விஷ்ணு விஷால்-ரஜினி நட்ராஜ், ▶டி.இமான்-மோனிகா, ▶பிரபுதேவா-ராம்லாத்
இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, வரலாற்று சாதனை படைத்துள்ளார். சவுதி ஸ்மாஷ் டேபிள் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர், காலிறுதிச் சுற்றில் தோல்வி அடைந்தார். இதனால், எலைட் உலக டேபிள் டென்னிஸ் தொடரில் காலிறுதியை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்ற அவர், உலக தரவரிசையில் 24ஆம் இடத்திற்கு முன்னேறினார். இதுவரை எந்தவொரு இந்திய வீராங்கனையும் இந்த சாதனையை செய்ததில்லை.
தமிழகத்தில் கர்ப்பிணியருக்கு ₹14,000 ரொக்கம், ₹4000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகம் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. 2 ஆண்டுகளாக இதில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் நிதியுதவி கிடைக்காமல் உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, மகப்பேறு நிதியுதவி விடுவிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் அதற்கு தீர்வு காணப்படும் எனவும் கூறினர்.
கொல்கத்தா வீரர் ஃபில் சால்ட், ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். உலகக் கோப்பைக்கான பயிற்சியைத் தொடங்குவதற்காக வீரர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டுமென, இங்கி., கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. அதனால், நேற்று ஜாஸ் பட்லர், வில் ஜாக்ஸ், ரீஸ் டோப்லி ஆகியோர் நாடு திரும்பிய நிலையில், இன்று ஃபில் சால்ட்டும் நாடு திரும்பினார். இதனால், கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இபிஎஸ் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஜூன் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின்போது, தயாநிதி மாறன் தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை இபிஎஸ் தெரிவித்தார். இதனை எதிர்த்து தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் இன்று ஆஜரானார். எனினும், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
வடகொரிய நாட்டில் பெண்கள் சிவப்பு நிற லிப்-ஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. லிப்-ஸ்டிக் என்பது மேற்கத்திய நாட்டின் தாக்கம் என்றும், சிவப்பு நிற லிப்-ஸ்டிக் பெண்களை கவர்ச்சியாக காட்டுகிறது என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த விதியை மீறுவோருக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படவுள்ளன. ஏற்கெனவே அந்நாட்டில் ஜீன்ஸ் பேண்ட் அணிய தடை உள்ளது.
ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் செல்வதற்கு 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் RCBக்கு எதிரான போட்டியை கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லாவிட்டால், மற்ற அணிகளின் தோல்வியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை ஏற்படலாம். ஒருவேளை RCBக்கு எதிராக CSK வெற்றி பெற்றாலும், SRH மற்றும் LSG அணிகளின் ரன்-ரேட்டைப் பொறுத்து ப்ளே-ஆஃப் செல்லும் அணிகள் முடிவு செய்யப்படலாம்.
மகளிர் உரிமைத் தொகை ₹1000 ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி தகுதியான குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அந்த வகையில் நாளை (மே15ஆம் தேதி) இதுவரை மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படவுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் மேல்முறையீடு செய்தவர்களுக்கு நாளை ₹1000 வராது. அவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு பணம் செலுத்தப்படும் என தெரிகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘G.O.A.T’ படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. யுவன் இசையில் கடந்த மாதம் வெளியான ‘விசில் போடு’ பாடல், வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் முறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையின் முக்கிய போக்குவரத்து முறைகளாக இருக்கும் இந்த மூன்றிலும் தற்போது வெவ்வேறு பயணச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. அதனை சீரமைக்கும் முடிவில் போக்குவரத்துத் துறை இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
Sorry, no posts matched your criteria.