News May 14, 2024
விவாகரத்து செய்து கொண்ட திரைப் பிரபலங்கள்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் அறிவித்தது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் விவாகரத்து செய்து கொண்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பட்டியல்: ▶தனுஷ்-ஐஸ்வர்யா, ▶சமந்தா-நாக சைதன்யா, ▶அமலா பால் -ஏ.எல்.விஜய், ▶செல்வராகவன்-சோனியா அகர்வால், ▶விஷ்ணு விஷால்-ரஜினி நட்ராஜ், ▶டி.இமான்-மோனிகா, ▶பிரபுதேவா-ராம்லாத்
Similar News
News December 16, 2025
CSK-வில் இணைந்த அகீல் ஹோசைன்

IPL மினி ஏலத்தில், WI ஆல்-ரவுண்டர் அகீல் ஹோசனை ₹2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. ஜடேஜாவின் இடத்தை நிரப்புவதற்கு ஒரு சிறந்த ஆல்-ரவுண்டரை தேடிய CSK, தற்போது அகீல் ஹோசனை அவரது அடிப்படை ஏலத்தொகைக்கு பெற்றுள்ளது. முன்னதாக, ரவி பிஷ்னோயையும் வாங்க CSK முனைப்பு காட்டியது. ஆனால் ₹5 கோடிக்கு பிறகு, ஏலம் கேட்பதை நிறுத்திக்கொண்டது. CSK-வின் இந்த தேர்வு சரியானதா? கமெண்டல சொல்லுங்க
News December 16, 2025
BREAKING: மெஸ்ஸி விவகாரம்.. அமைச்சர் ராஜினாமா

கொல்கத்தாவில் மெஸ்ஸி பங்கேற்ற நிகழ்ச்சியில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்ட விவகாரத்தால், மே.வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் அரூப் பிஸ்வாஸ் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் எனக் குறிப்பிட்டு திரிணாமூல் காங்., மூத்த தலைவர் குணால் கோஷ் இந்த தகவலை SM-ல் வெளியிட்டுள்ளார். தவறான நிர்வாக மேலாண்மை காரணமாகவே, மெஸ்ஸி நிகழ்ச்சியில் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்திருந்தது.
News December 16, 2025
பதிரனாவை ₹18 கோடிக்கு தூக்கிய KKR

2026 IPL AUCTION: இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவை ₹18 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது. CSK அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவரை, அந்த அணியே இன்றைய ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. டெல்லியும், லக்னோவும் போட்டி போட்டு ஏலம் கேட்ட நிலையில், கடைசியில் கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.


