India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மே 19ஆம் தேதி முதல் அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவக் காற்று வீசத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கில் இருந்து வீசும் காற்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பது பருவமழைக்கு சாதகமான சூழலை உருவாக்கியிருக்கிறது. ஜூன் 1ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
ஆந்திராவில் நேற்று தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் வாக்களித்தார். பின்னர், வெளியே வந்து அவர் அதிகாரிகளிடம் ஒப்புகைச் சீட்டு கேட்டார். ஒப்புகைச்சீட்டு கொடுக்கும் பழக்கம் இல்லை என்று கூறி அதிகாரிகள் அவரை அனுப்பி வைத்தனர். ஒரு கட்சியின் தலைவருக்கே தேர்தல் நடைமுறைகள் தெரியவில்லை என்று மக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இன்று வேறு எந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறாது. நாளை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். 19ஆம் தேதி சபரிமலை கோயில் பிரதிஷ்டை தினம் என்பதால், நாளை முதல் 19ஆம் தேதி வரை காலையில் நெய் அபிஷேகமும் நடைபெறும். 19ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் கட்டாயம் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு, சுயவிவரம், மருத்துவ விவரங்களுடன் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி செலுத்திய 10 நாளுக்கு பிறகே ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். https;//ihpoe.mohfw.in/index.php இணையத்தில் மஞ்சள் காய்ச்சல் விவரங்களை அறியலாம்.
ஒரே கோயிலில் 12 குபேரர்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அது எவ்வளவு பெரும் கொடுப்பினை! அப்படியான ஓர் அற்புத ஆலயம் தான் திருச்சிக்கு அருகில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம். அற்புத சிற்பங்களுடன் கூடிய தூண்கள், மண்டபங்கள், விசாலமான பிராகாரம், அருளும் பொருளும் அள்ளித் தரும் ஏகாம்பரேஸ்வரரின் அழகு, தரிசனம் என அனைத்தும் பிரமிக்க வைக்கும் அளவில் இந்த கோயில் அமைந்துள்ளது.
மத்திய அரசின் CBSE பாடத்திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில், 2 ஆயிரத்து 129 மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று அசத்தியிருக்கின்றனர். பன்னிரண்டாம் வகுப்பில் 20 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பில் 8 பேர் மட்டுமே 100/100 எடுத்திருந்தனர்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் திட்டம் இரண்டாம் கட்டமாக இன்று முதல் மே 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல், கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் முறை, விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து பல்வேறு துறை நிபுணர்கள் மூலம் தெளிவுபடுத்தப்படவுள்ளது.
இசை மீது ஆர்வம் கொண்ட ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி ஜோடி, பல்வேறு அற்புதமான பாடல்களை பாடியுள்ளனர். குறிப்பாக, உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே, பிறை தேடும் இரவிலே, யாரோ இவன் யாரோ இவன், யார் இந்த சாலையோரம் பூக்கள் பூத்ததோ போன்ற பாடல்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இருவரும் தங்களது விவகாரத்தை அறிவித்த நிலையில், மீண்டும் இணைந்து பாடுவார்களா என்பது ரசிகர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் ஓட்டுக்கு கட்சிகள் பணம் தரவில்லை என்று கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காக்கிநாடா, ராஜமகேந்திரவரம் ஆகிய பகுதிகளில் பணம் கொடுக்கவில்லை என்று கூறி மக்கள் வேட்பாளர்கள் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வேட்பாளர் அலுவலகத்தில் திரண்ட மக்களை போலீசார் விரட்டியடித்தனர்.
Sorry, no posts matched your criteria.