India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய டெல்லி அணியின் இஷாந்த் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 4 ஓவர் பந்து வீசிய அவர், 34 ரன்கள் கொடுத்து முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி அணி இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 14 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி தனக்கான அனைத்து போட்டிகளையும் முதல் அணியாக நிறைவு செய்துவிட்டது.
இன்று (மே 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்
➤ பாஜக தன்னை பார்த்து பயப்படுகிறது – கெஜ்ரிவால்
➤ 75 வயதில் ஓய்வு பெறும் விதி பாஜகவில் இல்லை- அமித் ஷா
➤ 70 கோடி பேர் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள் – பிரியங்கா
➤பாகிஸ்தானை வைத்து பாஜக அரசியல் செய்கிறது – மம்தா
➤ தோனியை புகழ்ந்த ஜான்வி கபூர்
பாகிஸ்தானில் முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களைத் தவிர்த்து அனைத்து மாநில அரசு நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் நடவடிக்கையாக, அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதன் மூலம் வரி செலுத்துவோரின் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்றும், மக்களுக்கு தரமான சேவைகளை வழங்க அது உதவும் எனவும் அவர் நம்புகிறார்.
நாடு முழுவதும் தற்போது 200க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் அமைவதற்கு முன்பு, நாட்டில் முதன்முதலில் கட்டப்பட்ட உயரமான கட்டிடம் எது தெரியுமா? அந்த பெருமை நமது தமிழ்நாட்டையே சேரும். சென்னையில் 1959ஆம் ஆண்டில் கட்டப்பட்ட எல்ஐசி கட்டிடமே அக்கட்டிடமாகும். 12 மாடிகளுடன் முதலில் கட்டப்பட்ட அக்கட்டிடம், நாட்டின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையை 1961 வரை வைத்திருந்தது.
பூர்வ ஜன்ம வினைகள், பாவங்கள் தோஷங்களாக மாறுவதாக ஞானநூல்கள் கூறுகின்றன. அதாவது, பூர்வ ஜன்மத்தில் பெற்றோரை கவனிக்காதவர், முதிய வயதில் முறையாகப் பேணாதவர், மறுஜன்மத்தில் செவ்வாய் தோஷத்துக்கு ஆளாவர். சகோதர- சகோதரிக்குச் சேரவேண்டிய சொத்துக்களை ஒருவரே அபகரிக்கும் போதும், ஒரு நிலத்தை அநியாய விலைக்கு ஏமாற்றி விற்கும்போதும், அந்த நபரை பூமிகாரகன் செவ்வாயின் கோபம் தோஷமாக தாக்கும்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய டெல்லி அணி 208/4 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அபிஷேக் பொரேல் 58 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய லக்னோ அணி, ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. இறுதியில் அந்த அணி 9 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் அர்ஷத் கான் 58 ரன்கள் எடுத்தார்.
பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பிரதமர் மோடி இந்தியாவின் அரசியலமைப்பு புத்தகத்தை கிழித்து ஏறிய பார்க்கிறார்கள் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுபான்மையினர் என அனைவருக்கும் உரிமைகளை வழங்குவது இந்த அரசியலமைப்புதான் எனக் கூறிய அவர், முதன்முறையாக அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாப்பதற்காக மக்களவைத் தேர்தல் நடக்கிறது எனக் கூறியுள்ளார்.
நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஜோதி லேபாரட்டரீஸ் ₹16,900 கோடி சந்தை மதிப்பு கொண்டது. உஜாலா, எக்ஸோ பார் உள்ளிட்டவற்றை அந்நிறுவனம் விற்பனை செய்கிறது. அந்நிறுவன அதிபரான எம்.பி. ராமசந்திரன், கேரளாவைச் சேர்ந்தவர். பிகாம் படித்துள்ள அவர், முதலில் அக்கவுண்டன்ட் ஆக பணியாற்றினார். பிறகு சகோதரரிடம் ₹5,000 கடன் வாங்கி, தனது மகள் ஜோதி பெயரில் அந்நிறுவனத்தை 1983இல் தொடங்கி சாதித்தார்.
அமெரிக்காவை சேர்ந்த சர்ச்சைக்குரிய குத்துச்சண்டை வீரரான மைக் டைசன், 2005இல் ஓய்வு பெற்றார். தற்போது அவருக்கு 57 வயதாகும் நிலையில், மீண்டும் குத்துச்சண்டையில் களமிறங்கவுள்ளார். டெக்சாஸில் வரும் ஜுலை 20ஆம் தேதி ஜேக் பால் என்ற பிரபல யூடியுபருடன் மோதவுள்ளார். இதற்காக அவர் தீவிரமாக தயாராகி வருகிறார். இதுகுறித்து பேட்டியளித்த டைசன், தனது உடல் தற்போதும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.