News May 15, 2024
லக்னோ அணி வீரர்களை கலங்கடித்த இஷாந்த் ஷர்மா

லக்னோ அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய டெல்லி அணியின் இஷாந்த் ஷர்மா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 4 ஓவர் பந்து வீசிய அவர், 34 ரன்கள் கொடுத்து முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி அணி இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 7 தோல்விகளுடன் 14 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. டெல்லி அணி தனக்கான அனைத்து போட்டிகளையும் முதல் அணியாக நிறைவு செய்துவிட்டது.
Similar News
News December 12, 2025
FLASH: வெள்ளி விலை ஒரே நாளில் ₹6,000 உயர்ந்தது

<<18540317>>தங்கமும்<<>>, வெள்ளியும் போட்டி போட்டுக் கொண்டு விலை உயர்ந்து வருகின்றன. இன்று(டிச.12) ஒரே நாளில் பார் வெள்ளி கிலோவுக்கு ₹6,000 அதிகரித்துள்ளது. இதனால், 1 கிராம் ₹215-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,15,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் இந்திய சந்தையில் வெள்ளியின் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.
News December 12, 2025
அடுத்தமுறை டாக்டர் Prescription பார்த்தால், இத கவனியுங்க!

டாக்டர் Prescription கொடுத்தால், அதிலிருக்கும் பல Short form வார்த்தைகள் என்னவென்றே புரியாது. ஆனால், இனி அந்த கவலை வேண்டாம்.. இவற்றை ஞாபகம் வெச்சிக்கோங்க: ◆Dx- Diagnosis (நோய் கண்டறிதல்) ◆Rx- Prescription (மருந்துக்குறிப்பு) ◆Tx- Treatment (சிகிச்சை) ◆Sx- Surgery (அறுவை சிகிச்சை) ◆Hx- History (மருத்துவ வரலாறு) ◆Fx- fracture (எலும்பு முறிவு). இத்தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News December 12, 2025
தேர்தல் பணிகளை ஆலோசிக்க தமிழகம் வரும் அமித்ஷா

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் தமாகாவை தவிர வேறு கட்சிகள் இதுவரை இணையவில்லை. இதனிடையே நேற்று EPS-ஐ சந்தித்து ஆலோசனை நடத்திய நயினார் நாகேந்திரன், கள நிலவரத்தை தலைமையிடம் விளக்க நாளை டெல்லி செல்கிறார். இந்நிலையில் வரும் 15-ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகிறார். அப்போது கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.


