India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வருமான வரியின் புதிய முறையில் (New Regime) குறைந்தபட்ச வரிவரம்பை ₹5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது ₹3 லட்சம் முதல் ₹6 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 5% வரி விதிக்கப்படுகிறது. இதனை ₹5 லட்சமாக உயர்த்துவதன் மூலம், புதிய முறையில் வரி செலுத்துவோரின் வரி குறையும். ஆனால், பழைய முறை வரி விதிப்பில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
டி20 உலகக் கோப்பையுடன் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து அந்தப் பதவிக்கு புதியவரை தேர்வு செய்ய பிசிசிஐ விண்ணப்பம் கோரியது. இதன்படி கம்பீர், WV ராமன் ஆகியோரிடம் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது. இதையடுத்து கம்பீரை 3 வடிவ கிரிக்கெட் அணி பயிற்சியாளராக 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ மாத்யூ குலநாதன், கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூட்டில் நிறுவனத்தால் பினராயி விஜயனின் மகள் டி. வீனாவின் எக்சலாஜிக் சொல்யூசன் நிறுவனத்துக்கு ரூ.1.72 கோடி அளித்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு விசாரணை கோரி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், பினராயி விஜயன், வீனா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வெப்பத்தில் இருந்து தப்ப ஏசியை மக்கள் அதிகம் பயன்படுத்துவதால், அதன் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2023இல் 11 லட்சம் ஏசி விற்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் 15 லட்சம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் தேவை அதிகரித்த நேரத்தில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மேலும் உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளதால், ஏசி விலையை முன்னணி நிறுவனங்கள் 6%-8% வரை அதிகரித்துள்ளன.
State of Global Air 2024 என்ற பெயரில் அமெரிக்காவைச் சேர்ந்த Health Effects நிறுவனம் காற்று மாசு பிரச்னைகள் குறித்து ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காற்று மாசால் இந்தியாவில் சராசரியாக தினமும் 5 வயதுக்குட்பட்ட 464 குழந்தைகள் உயிரிழப்பதாகத் கூறப்பட்டுள்ளது. 2021இல் உலகம் முழுவதும் 81 லட்சம் பேர் இறந்ததாகவும், இதில் இந்தியாவில் மட்டும் 21 லட்சம் பேர் பலியானதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியானது. இதில், 94.56% பேர் தேர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, தோல்வியடைந்தவர்களுக்கு ஜூலை 2 முதல் துணைத்தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில், இதற்கான ஹால் டிக்கெட்டை துணைத்தேர்வு எழுதுபவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். செய்முறை தேர்வு தேதி குறித்த விவரத்தை முதன்மை கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.
மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் பாஜகவால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. எனினும், தனித்து போட்டியிட்டு சீமானின் நாதக குறிப்பிட்ட வாக்குகளை பெற்றுள்ளது. இதை தெரிந்து கொண்ட பாஜக மேலிடம், நாதகவை கூட்டணிக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளதா என யோசித்து வருவதாகவும், விரைவில் இதற்கான முயற்சியை அக்கட்சியின் மேலிடம் மேற்கொள்ளக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளை பதிவு செய்து இயக்க உரிமையாளர்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். பிற மாநில பேருந்துகளை தமிழகத்தில் மறுபதிவு செய்ய தேவையான வசதிகளை செய்துதர கோரிக்கை விடுத்துள்ளனர். அரசின் பல்வேறு கெடுகளை மீறி இன்னும் 547 ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவெண்ணாக மாற்றாமல் உள்ள நிலையில், இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்ய வேண்டாம் என அரசு பயணிகளை எச்சரித்திருந்தது.
எல்ஐசி நிறுவனம் நாடு முழுவதும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள நிலம், கட்டடங்களை விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியானது. அத்துடன், அதனை விற்று ₹50,000 முதல் 60,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த எல்ஐசி நிறுவனம், அச்செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவை தவறானவை எனவும் விளக்கமளித்துள்ளது.
திருமண சமத்துவ மசோதா நேற்று தாய்லாந்து நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், ஓர்பால் திருமணத்தை அங்கீகரித்த முதல் தெற்காசிய நாடு என்ற பெருமையை தாய்லாந்து பெற்றுள்ளது. “இறுதியில் காதல் வென்றது” என்று நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் பேசியது கவனத்தை ஈர்த்தது. இச்சட்டம் நிறைவேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு ஓர்பால் ஈர்ப்பாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.