News June 19, 2024
மறுப்பு தெரிவித்தது எல்ஐசி

எல்ஐசி நிறுவனம் நாடு முழுவதும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள நிலம், கட்டடங்களை விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியானது. அத்துடன், அதனை விற்று ₹50,000 முதல் 60,000 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்த எல்ஐசி நிறுவனம், அச்செய்திகளில் உண்மை இல்லை என்றும் அவை தவறானவை எனவும் விளக்கமளித்துள்ளது.
Similar News
News January 18, 2026
கோவை: ஒரே ஆண்டில் 277 பேர் சாலை விபத்தில் பலி!

கோவை மாநகரில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 277 போ் உயிரிழந்துள்ளனா். இதேபோல் ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் தொடா்பாக 6,70,512 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மது அருந்தி வாகனம் ஓட்டிய 18,331 போ் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.12.72 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
News January 18, 2026
அரசு கஜானாவில் போதை பொங்கல்: அருண்ராஜ்

தமிழர்களின் இல்லங்களில் இன்பம் பொங்கியதோ இல்லையோ, அரசின் கஜானாவில் மது விற்பனை பணம் மட்டும் பொங்கி வழிந்துள்ளதாக அருண்ராஜ் விமர்சித்துள்ளார். 4 நாள்களில் ₹900 கோடி வரை மது விற்பனை நடந்துள்ளதாக கூறியுள்ள அவர், ‘மனமகிழ் மன்றங்கள்’ வழியாக கள்ள மது விற்பனை ஆறாக ஓடியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், கொல்லைப்புறமாக மது விற்பனையை பெருக்குவதுதான் திடாவிட மாடல் ஆட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News January 18, 2026
பாஜகவுக்கு எத்தனை சீட்: இன்று முடிவாகிறதா?

PM மோடியின் TN வருகைக்கு முன் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் என TN பாஜக தேர்தல் பொறுப்பாளர் <<18874134>>பியூஷ் கோயல்<<>> அறிவித்திருந்தார். இந்நிலையில், 2 நாள் பயணமாக இன்று அவர் சென்னை வருகிறார். NDA கூட்டணி கட்சிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ள அவர், இன்றே அதிமுகவுடனான தொகுதி பங்கீட்டை இறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே பாஜக 50 தொகுதிகள் வரை கேட்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


