News June 19, 2024
பினராய் விஜயன், மகளுக்கு கேரள ஐகோர்ட்டு நோட்டீஸ்

கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ மாத்யூ குலநாதன், கொச்சின் மினரல்ஸ் மற்றும் ரூட்டில் நிறுவனத்தால் பினராயி விஜயனின் மகள் டி. வீனாவின் எக்சலாஜிக் சொல்யூசன் நிறுவனத்துக்கு ரூ.1.72 கோடி அளித்தது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு விசாரணை கோரி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், பினராயி விஜயன், வீனா உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Similar News
News January 15, 2026
நெல்லை: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi’ சொல்லுங்க

நெல்லை மாவட்ட மக்கள் இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும்.இதனை ஷேர் பண்ணுங்க
News January 15, 2026
BIG BREAKING: ஜன நாயகன்.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட கோரிய வழக்கை விசாரிக்க SC மறுத்துள்ளது. U/A சான்றிதழ் வழங்கக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை எதிர்த்து, படக்குழு மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்த SC, சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது. அதேநேரம், ஜன.20-ம் தேதி சென்சார் விவகாரத்தில் ஐகோர்ட் விசாரித்து முடிவெடுக்கவும் ஆணையிட்டுள்ளது.
News January 15, 2026
2 நிமிடங்களில் டிரைவிங் லைசன்சில் நம்பர் மாற்றலாம்

➤https://sarathi.parivahan.gov.in/ -க்கு சென்று Online Services & Driving License Related Services ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க ➤உங்கள் மாநிலத்தை தேர்வு செய்யுங்கள் ➤பிறகு Other Menu என்ற ஆப்ஷனை க்ளிக் செய்தால், Mobile Number Update என காட்டும் ➤அதை க்ளிக் செய்து லைசன்ஸ் தொடர்பான விவரங்களை உள்ளிடுங்கள் ➤புதிய மொபைல் நம்பரை Type செய்தால் உடனடியாக அப்டேட் ஆகிவிடும். SHARE பண்ணுங்க.


