India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கனமழை எதிரொலியாக தற்போது வரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாகை, தூத்துக்குடி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல், தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் முடிவு எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருவாரூரிலும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது.
ஆண் யானைகள் இனப்பெருக்கத்திற்கு தயாராகும் நேரத்தில் கண்களுக்கும் காதுகளுக்கும் இடையே மதநீர் (Musth) சுரக்கும். இதனையே யானைக்கு மதம் பிடித்தது என்கிறோம். இந்த நேரங்களில் யானை மிகவும் ஆக்ரோஷமாக காணப்படும். ஆண் யானைகளின் உடலில் டெஸ்டோஸ்டீரோன் அளவு அதிகம் இருப்பதாலேயே மதம் பிடிக்கிறது. இது பெண் யானைகளுக்கு குறைவு என்பதால் மதம் பிடிக்க வாய்ப்பில்லை.
➤புரோ கபடி தொடர்: 62வது லீக் போட்டியில் யு மும்பா அணி 38-37என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது. ➤ஹாக்கி ஆசிய சாம்பியன் கோப்பை: இன்று நடைபெறும் அரையிறுதியில் இந்தியா-ஜப்பான் அணிகள் மோதுகின்றன. ➤இந்தியா – மலேசியா அணிகள் மோதிய நட்பு கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. ➤இந்தியாவின் சாத்விக் – சிராக் ஜோடி பங்கேற்கும் சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பணி நேரமாக இருக்கிறது. ஆனால், பெரும்பாலான டாக்டர்கள் உரிய பணி நேரத்தில் இருப்பதில்லை என தொடர்ந்து புகார்கள் வருகின்றன. மேலும், நோயாளிகளையும் அவர்கள் முறையாக கவனிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், டாக்டர்களை கண்காணிப்பதற்காகவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த அரசு முடிவு செய்துள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் என்ற செய்தி சமீபமாக வெளியாகி வருகிறது. அது யாருடன், எப்போது, எங்கு என்ற கேள்விகளுக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. தன்னுடைய 15 ஆண்டுகால நண்பரான ‘ஆண்டனி தட்டில்’ என்பவரை அவர் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணம் கோவாவில் டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களின்போது அதிமுகவின் கெட்ட நேரத்தால் திமுக வென்றுவிட்டதாக அக்கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார். நாமக்கல் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர், 2026 தேர்தலில் அதிமுகவை மீண்டும் வெற்றி பெற செய்து எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும் என்றும் அவர் பேசினார்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ‘பார்டர் கவாஸ்கர் டிராஃபி’ (BGT) கிரிக்கெட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்கவுள்ளது. கடைசி நான்கு BGT தொடர்களையும் இந்தியா வென்றிருப்பதால், இந்த ஆண்டு கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா முழு பலத்துடன் களம் இறங்குகிறது. அதேநேரம், நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இதில், உங்கள் விருப்ப அணி எது?
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களை காண இன்று இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் நவ.19 முதல் 25ஆம் தேதி வரையில் உலக பாரம்பரிய வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு முதல் நாளான இன்று இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட இருக்கிறது. அதனால் இன்று மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் நுழைவு கட்டணம் செலுத்தாமல் புராதன சின்னங்களை பார்வையிடலாம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் கழிவறை இல்லாத பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு காலரா உள்ளிட்ட பல நோய்த்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் நவம்பர் 19ஆம் தேதி ’உலக கழிவறை தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினத்தில், அனைவருக்கும் கழிவறை வசதி கிடைப்பதை உறுதி செய்ய உறுதிமொழி ஏற்போம்.
சமூகத்தில் வலுவான நிலையில் இருக்கும் ஆண்களுக்கு தனியாக ஒரு தினம் தேவையா என்ற கேள்வி உலகம் முழுவதும் உண்டு. அதனையெல்லாம் மீறி, ஆண்களின் உரிமைகளுக்காகவும், அங்கீகாரத்திற்காகவும் குரல்கள் எழுப்பப்பட வேண்டும் என்ற நோக்கில் ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச ஆண்கள் தினம் இன்று (நவம்பர் 19). இந்த நாளில், ஆண்களிடம் இருந்து பறிக்கப்படும் உரிமைகள் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
Sorry, no posts matched your criteria.