News July 11, 2025

₹36,900 சம்பளத்தில் அரசு பள்ளிகளில் 1,996 காலியிடங்கள்

image

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுநர், உடற்கல்வி இயக்குநர் உள்ளிட்ட 1,996 காலியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed, B.Sc.Ed படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும் (இதில் தமிழ் கட்டாயம்). ₹36,900- ₹1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

News July 11, 2025

கருணாநிதி வாழ்ந்த தெருவில் உறுப்பினர் சேர்க்கை: CM

image

திருவாரூரில் கருணாநிதி வாழ்ந்த சன்னதி தெருவில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு மூலம் 54,310 புதிய உறுப்பினர்களையும், 30,975 குடும்பங்களையும் திமுகவில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதி இணைத்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். திருச்சுழியை முந்திச்செல்ல களத்தில் பணியாற்றுபவர்களுக்கு வாழ்த்துகள் எனவும் பதிவிட்டுள்ளார்.

News July 11, 2025

மல்லை சத்யா திமுகவில் இணைய உள்ளதாக தகவல்

image

மல்லை சத்யா, துரை வைகோ இடையே இருந்த மோதல் தற்போது வைகோ, மல்லை சத்யா இடையேயான மோதலாக மாறியுள்ளது. பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததுபோல் மல்லை சத்யா எனக்குத் துரோகம் செய்துவிட்டார் என வைகோ பேசியுள்ளார். இந்நிலையில், வைகோவின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது எனவும், அதிர்ச்சியை அளிப்பதாகவும் கூறியுள்ள மல்லை சத்யா, விரைவில் திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

News July 11, 2025

‘டம்மி வாய்ஸ்’ ஆக EPS இருக்க அவசியமில்லை: நயினார்

image

பாஜகவுக்கு டப்பிங் வாய்ஸ் போல பேசிய இபிஎஸ், தற்போது ஒரிஜினல் வாய்ஸ் ஆகவே பேச தொடங்கிவிட்டார் என CM ஸ்டாலின் விமர்சித்து இருந்தார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், பாஜகவின் ‘டம்மி வாய்ஸ்’ ஆக இபிஎஸ் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், என்ன கருத்தை பேச வேண்டுமோ அதைத்தான் அவர் பேசுவதாக தெரிவித்தார். அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த நாள் முதல் CM ஸ்டாலினுக்கு ஜுரம் வந்துவிட்டதாக கூறினார்.

News July 11, 2025

அறநிலையத்துறை கல்லூரிகள்: EPS விளக்கம்

image

கோயிலுக்கு வரும் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள் என அண்மையில் இபிஎஸ் பேசியிருந்தார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், விழுப்புரத்தில் பேசிய இபிஎஸ், அறநிலையத்துறை நிதியில் கல்லூரி கட்டினால் மாணவர்களுக்கு முழு வசதியும் கிடைக்காது. அறநிலையத்துறை தான் அனைத்துக்கும் நிதி ஒதுக்க வேண்டும். ஆகவே மாணவர்களின் நலன் கருதியே அரசு கலைக்கல்லூரியாக கொண்டு வர தான் சொன்னதாக விளக்கமளித்தார்.

News July 11, 2025

தனது பிராண்டுக்காக Photoshoot நடத்திய ஷ்ரத்தா

image

நடிகை ஷ்ரத்தா கபூர் இன்ஸ்டாவில் சிவப்பு நிற உடையில் ஒளிரும் நகைகளுடன் சில புகைப்படங்களை வெளியிட்டார். இந்த படங்களானது Palmonas நகை பிராண்டுக்காக எடுக்கப்பட்டதாகும். இந்த நிறுவனத்தின் 21% பங்குகள் ஷ்ரத்தாவிடம் தான் உள்ளன. அவர் அணிந்திருக்கும் நகைகள் தங்க முலாம் பூசிய வெள்ளி நகைகள் ஆகும். நடிகைகளிலேயே இன்ஸ்டாவில் அதிகம் Followers வைத்துள்ள ஷ்ரத்தா தன் பிராண்டை அங்கு பிரபலப்படுத்துகிறார்.

News July 11, 2025

குஜராத் பாலம் விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆனது

image

குஜராத் மாநிலத்தில் மாஹி ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் திடீரென இடிந்து விழுந்தது. அதில் வந்த பல வாகனங்கள் ஒன்றின்பின் ஒன்றாக ஆற்றில் விழுந்தன. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான 4 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக 4 பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

News July 11, 2025

ஜூலை 11…வரலாற்றில் இன்று!

image

1710 – முதல் இந்திய விடுதலை வீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள். * 1966 – திரைப்பட இயக்குநர் பாலாவின் பிறந்தநாள். *1982 – இத்தாலி மேற்கு ஜெர்மனியை 3-1 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து கால்பந்து உலகக்கோப்பையை வென்றது. *1991 – ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற நைஜீரிய விமானம் சவூதி அரேபியாவில் விபத்துக்குள்ளானதில் 261 பேர் உயிரிழந்தனர். *2006 – மும்பை ரயில் குண்டுவெடிப்புகளால் 209 பேர் உயிரிழந்தனர்.

News July 11, 2025

தலையில் அதிக எண்ணெய் வைத்தாலும் ஆபத்து..!

image

தினமும் தலைமுடியில் அதிக எண்ணெய் தேய்த்தால் அது முடியின்கால்களை அடைத்துவிடுமாம். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். அதைப்போன்று அதிக எண்ணெய் இருக்கும்போது தூசியும், அழுக்கும் தலையில் சேருவதால் அரிப்பு, பொடுகு அதிகரிக்குமாம். ஆகையால் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தலை முழுவதும் படும்படி நன்றாக மசாஜ் செய்து, எண்ணெய் பிசுக்கு போகும் படி கழுவினாலே போதுமானதாம்.

News July 11, 2025

நாங்கள் 11, திமுக பூஜ்ஜியம்: இபிஎஸ்

image

அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது, ஆனால் திமுக ஆட்சியில் ஒரு மருத்துவ கல்லூரியாவது கொண்டு வந்தீர்களா என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் அரசுப்பள்ளியில் படித்து வந்ததால், மருத்துவப்படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்கள் சேரும் வகையில் 7.5% உள் இடஒதுக்கீடு கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!