India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி சீமான் புதிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். நெல்லையில் நேற்று நடந்த கடலம்மா மாநாட்டு மேடைக்கு கையில் ரிமோர்ட்டுடன் சீமான் வந்தார். அப்போது பெரிய திரையில் வீடியோ காட்சிகளுடன் விளக்கி பேசிய அவர், இனிமேல் டிஜிட்டல் முறையிலும் பரப்புரை செய்யப்படும் என தெரிவித்தார். இதனையடுத்து, கட்சி நிர்வாகிகளும் டிஜிட்டல் பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

கிரிக்கெட், கோல்ப் உள்ளிட்ட போட்டிகளில் கலக்கிய லெஜெண்ட் பிரகாஷ் பண்டாரி(90) காலமானார். டெல்லியில் இருந்து டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராவார். 1955-ல் கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்று அசத்தியவர். பல இளம் வீரர்களை உருவாக்கியுள்ளார். அவரது சாதனையை போற்றும் வகையில் இன்று டெல்லி கிரிக்கெட் மைதானத்தில் இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது. #RIP

தவெகவில் கோஷ்டி அரசியல் கொடிகட்டி பறப்பதாக பேசப்படுகிறது. ஆரம்பத்தில் விஜய்க்கு அனைத்துமாய் இருந்த புஸ்ஸி ஆனந்தின் நிலை தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறதாம். காரணம், ஆதவ், நிர்மல் குமார் இருவரும் ஆளுக்கு ஒரு அரசியல் செய்கிறார்களாம். இதனால், ஆனந்த் மீதான லைம் லைட் குறைந்து வருவதாக பார்க்கப்படுகிறது. எனவே, அதிகாரத்தை தக்கவைக்க கட்சிக்குள் Cold War நடப்பதாக தவெகவினர் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் <<18355051>>போர் நிறுத்த திட்டம்<<>>, உக்ரைனில் அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்கும் என புடின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்கா தங்களுடன் ஆலோசிக்கவில்லை என்றாலும், 28 நிபந்தனைகள் அடங்கிய ஆவணத்தை அனுப்பி வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த அமைதி திட்டத்தை உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் ஏற்க மறுத்தால், ரஷ்ய படைகள் முன்னேறுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

வீட்டு வேலை, கட்டட வேலை, விவசாய கூலி உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களும் தங்களது 60 வயதிற்கு பிறகு மாதந்தோறும் ₹3,000 ஓய்வூதியம் பெற முடியும். இதற்கு மத்திய அரசின் <

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில், இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நாளையும், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாளும் கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் குழு அமைத்திருப்பதை ப.சிதம்பரம் வரவேற்றுள்ளார். இது INDIA கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதாகவும், அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, தவெகவுடன் <<18302354>>காங்கிரஸ்<<>> கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நைஜீரியாவில் கிறிஸ்தவ பள்ளி ஒன்றில் 215 மாணவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். அங்கு, கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், ஆயுதம் ஏந்திய கும்பல் பள்ளியை தாக்கி 12 ஆசிரியர்களையும் கடத்தி சென்றது. ஏற்கெனவே இந்த வார தொடக்கத்தில் மற்றொரு பள்ளியில் மாணவிகள் 25 பேர் கடத்தப்பட்டனர். ஒரே வாரத்தில் 2-வது கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், பெற்றோர்கள் பிள்ளைகளை காணாமல் கதறி வருகின்றனர்.

விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நாளை காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் ஜேப்பியார் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் என்று புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த சிறு குறு விவசாயிகள், நெசவாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 2000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு 2026-ம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியலை உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை, தைப்பூசம், ரம்ஜான், பக்ரீத், மே தினம், மிலாடி நபி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்பட மொத்தம் 23 நாள்கள் விடுமுறையாகும். மேலும், ஜன.14-க்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.