India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள ‘புஷ்பா -2’ படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியதைப் போல, இப்படத்தில் ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். ‘Kissik’ என பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாடல் நவ. 24ஆம் தேதி இரவு 7:02க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆஸிக்கு எதிராக பெர்த்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வீரர் விராட் கோலியே அதிக ரன்கள் குவித்துள்ளார். WACA மற்றும் Optus மைதானங்களில் தலா 1 டெஸ்ட் போட்டி, அதாவது 2 டெஸ்ட் விளையாடி மாெத்தம் 259 ரன்கள் குவித்துள்ளார். அதில் 2018இல் Optus மைதானத்தில் விளாசிய 123 ரன்களும் அடங்கும். அதையடுத்து சச்சின் டெண்டுல்கர், WACA மைதானத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 226 ரன்கள் குவித்துள்ளார்.
IPL ஏலத்தில் ரிஷப் பண்டை எடுக்க அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். ‘இந்த ஆண்டு அதிகபட்சமாக பண்ட் ₹25-₹28 கோடி வரை ஏலத்தில் எடுக்கப்படுவார் என நினைக்கிறன். அவரை ஏலத்தில் எடுக்க பஞ்சாப், RCB அணிகளுக்கிடையே கடும் போட்டி ஏற்படலாம்’ என்றார். டெல்லி அணியின் கேப்டனாக இருந்த பண்டை அந்த அணி தக்கவைக்காமல் கழற்றிவிட்டது குறிப்பிடத்தக்கது.
போர்க்குற்றத்திற்காக இஸ்ரேல் PM நெதன்யாகு, அந்நாட்டு EX பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்டுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதன் மூலம் நெதன்யாகு, கேலன்ட் வெளிநாடுகளுக்குச் சென்றால் கைது செய்யப்படலாம். காசா மக்களுக்கு உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு தடை ஏற்படுத்தி, உயிரிழப்புகளுக்கு வழிவகுத்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் இன்று பழங்குடி மக்கள் பயணம் செய்த வாகனங்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 38 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 29 பேர் ஹாஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் கைபர் மாவட்டத்தில் தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் இடையே நடந்த மோதலில் 9 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 8 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
திருடர்கள் என்றால் பணம், நகை, விலை உயர்ந்த பொருட்களை திருடி நாம் பார்த்திருப்போம். ஆனால் கேரளாவின் வைக்கம் பகுதியில் ஒரு வீட்டில் ஒரு திருடன் நகை, பணத்துடன் சச்சினின் ‘sachin god of cricket’ புத்தகத்தையும் திருடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதை பார்க்கும் நெட்டிசன்கள் திருட வந்த இடத்தில் சச்சினின் புத்தகத்தை திருடிச் சென்றுள்ளார் என்றால் நிச்சயம் அவரின் தீவிர ரசிகர் தான் என கமெண்ட் செய்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் WACA, Optus ஆகிய 2 மைதானங்கள் உள்ளன. இதில் WACA மைதானத்தில் இந்தியா, ஆஸி. இடையே 4 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. அதில் 3இல் ஆஸி, 1இல் இந்தியா வென்றுள்ளன. Optus மைதானத்தில் நடந்த ஒரேயொரு போட்டியில் ஆஸியே வென்றுள்ளது. நாளை இந்தியா, ஆஸி முதல் டெஸ்ட் Optus மைதானத்திலேயே நடக்கிறது. பதிலடி கொடுக்குமா இந்தியா? உங்கள் கமெண்டை கீழே பதிவிடுங்க.
ரோஹித் ஷர்மா வருகிற 24ஆம் தேதி ஆஸி., செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. IND vs AUS இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில், 3ஆம் நாள் ஆட்டத்தின் போது ரோஹித் அங்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், டிச.6ஆம் தேதி நடைபெறும் 2ஆம் போட்டியின் போது, அவர் கேப்டன் பொறுப்பேற்று விளையாட உள்ளார். AUS-க்கு எதிராக 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் IND விளையாடுகிறது.
நடிகை கஸ்தூரியை 2 தனிப்படை அமைத்து பிடித்த போலீசார், செந்தில் பாலாஜி தம்பியை இதுவரை பிடிக்காதது ஏன்? என செல்லூர் ராஜு வினவியுள்ளார். திமுகவினர் பேசாத பேச்சையா கஸ்தூரி பேசிவிட்டார் எனக் குறிப்பிட்ட அவர், அனைவரும் பேசுவதைப்போல தான் அவரும் பேசிவிட்டார் என்றார். மேலும், தேர்தல் பணிகளை முன்கூட்டியே தொடங்கினாலும் திமுக, அதன் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் என ஆரூடம் தெரிவித்தார்.
நயனின் ‘Beyond The Fairytale’ ஆவணப்படத்தில், ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகளை இணைக்க தனுஷிடம் NOC கேட்டுள்ளார். ஆனால் ₹6 கோடி பட்ஜெட் சொல்லிவிட்டு, ₹16 கோடி வரை செலவை இழுத்ததால் கடுப்பில் இருந்த தனுஷ், NOC தர மறுத்துள்ளார். இதையடுத்து, முக்கிய அரசியல் கட்சியின் பிரமுகர் தனுஷை மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.