News November 21, 2024
நயன் விவகாரத்தில் தனுஷை மிரட்டிய அரசியல்வாதி?

நயனின் ‘Beyond The Fairytale’ ஆவணப்படத்தில், ‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகளை இணைக்க தனுஷிடம் NOC கேட்டுள்ளார். ஆனால் ₹6 கோடி பட்ஜெட் சொல்லிவிட்டு, ₹16 கோடி வரை செலவை இழுத்ததால் கடுப்பில் இருந்த தனுஷ், NOC தர மறுத்துள்ளார். இதையடுத்து, முக்கிய அரசியல் கட்சியின் பிரமுகர் தனுஷை மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
Similar News
News November 15, 2025
பண மழை கொட்டும் 6 ராசிகள்

நாளை(நவ.16) துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு சூரிய பகவான் பெயர்ச்சி அடைவதால் 6 ராசியினருக்கு அதிர்ஷ்டம். *மிதுனம்: பண வரவு அதிகரிக்கும். *கடகம்: பணியில் ஊதிய உயர்வுக்கு வாய்ப்பு. *சிம்மம்: நிலம், சொத்து, வாகனங்களால் பயன் அடையலாம். *கன்னி: வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். *தனுசு: பண வரவு அதிகமாவதால் நிதிநிலை மேம்படும். *மகரம்: வருமானம் அதிகரிக்கும். நீண்டநாள் ஆசை நிறைவேறும்.
News November 15, 2025
பள்ளிகளில் புதிய மாற்றம்.. இனி யாரும் தப்பிக்க முடியாது!

பள்ளிகளில் ஆய்வுப் பணிகளை மேம்படுத்த ‘பள்ளிப் பார்வை 2.0’ என்ற APP-ஐ அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், 6 முதல் 9-ம் வகுப்பு வரை திறன் இயக்கத்தில் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் திறம்பட ஆய்வு செய்யுமாறும், ஆய்வின்போது குறைந்தது 2 மாணவர்களின் நோட்டுகளை சரிபார்க்க வேண்டும் எனவும் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 15, 2025
பற்கள் மஞ்சளா இருக்கா? நீங்களே சரி செய்யலாம்!

பற்கள் மஞ்சளாக இருப்பதால் வாய் திறந்து பேசக்கூட சங்கடப்படுகிறீர்களா? கவலைய விடுங்க. இதனை வீட்டிலேயே சரி செய்யலாம். ஒரு டீஸ்பூன் உப்புடன் சில துளிகள் எண்ணெய் கலந்து, பிரஷ் பயன்படுத்தி பற்களில் ஒரு வாரம் தேய்க்கவும். எலுமிச்சை (அ) ஆரஞ்சு பழத்தோலையும் பற்களில் தேய்க்கலாம். இவற்றை தொடந்து செய்துவர மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச்சென்று ஆகும் என்கின்றனர். பலருக்கு பயனளிக்க SHARE THIS.


