News November 22, 2024

இந்திய அரசியலமைப்பில் Secularism இருக்குமா?

image

இந்திய அரசியலமைப்பு முகவுரையில் உள்ள “சோசலிசம், மதச்சார்பின்மை” வார்த்தைகளை நீக்க கோரும் வழக்கில், வரும் 25ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளிக்கிறது. சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் தொடர்ந்த இவ்வழக்கை, பெரிய அமர்வுக்கு மாற்றவும் SC மறுத்துவிட்டது. 1976 எமர்ஜென்சியின்போது 42வது சட்டத்திருத்தம் மூலம் இந்திரா காந்தி அரசால் முறையாக பார்லிமெண்ட் இன்றி, இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டது என்பதுதான் புகார்.

News November 22, 2024

ஏக்நாத் ஷிண்டே கிங்கா? கிங் மேக்கரா?

image

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், அனைவரது கவனமும் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் திரும்பியுள்ளது. சிவசேனாவை தன்வசம் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தற்போது 38 எம்.எல்.ஏக்களுடன் முதல்வராக உள்ளார். 102 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக DCM பதவியைத் தான் வைத்துள்ளது. Exit Polls கணிப்புகள் படி நாளை தேர்தல் முடிவுகள் வந்தால் மீண்டும் ஏக்நாத் ஷிண்டே கிங்(CM), கிங் மேக்கராக உருவெடுப்பார்.

News November 22, 2024

செல் நம்பர் போதும்.. அத்தனை படங்களும் இலவசம்

image

அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஓடிடி தளங்கள் கட்டணத்தை வசூலித்து கொண்டே அனைத்து சேவைகளையும் அளிக்கின்றன. இந்நிலையில், மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனம் WAVES என்ற புதிய ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தளத்தில் நமது செல்போன் எண்ணை உள்ளிட்டு நுழைந்தால் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் படம், வெப் சீரீஸ், டிவி நேரலை இலவசமாக காணலாம். SHOPPING சேவையையும் இத்தளம் அளிக்கிறது.

News November 22, 2024

காஷ்மீரில் மக்களை தாக்கிய ராஷ்டிரிய ரைஃபிள்ஸ்

image

ஜம்மு & காஷ்மீரின் கிஷ்த்வார் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது, ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பொதுமக்களை தாக்கியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மனித உரிமை மீறலில் ஈடுபட்ட வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முஃப்தியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

News November 22, 2024

ஐபோன் பிரியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

image

ஆப்பிள் 4வது தலைமுறை ஐபோன் SEயை அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது முந்தைய மாடலான ஐபோன்14 BASE மாடல் போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும். 8 GB RAM, 60Hz Refreshing rate, 6.1 inch OLED டிஸ்ப்ளே, பின்புறத்தில் 48MP சென்சார், செல்பி கேமராவில் 12MP சென்சார் போன்ற அம்சங்கள் இடம் பெற உள்ளது. இதன் விலை ₹48k முதல் ₹ 50k வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 22, 2024

கீழே சிந்திய ரேஷன் அரிசியால் ரூ.1,900 கோடி நஷ்டம்

image

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ஏற்றி இறக்கும்போது சிந்திய அரிசியால் ரூ.1,900 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது ICRIER வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதில், 2022 – 23 ஆம் ஆண்டில் 5.2 லட்சம் டன் அரிசியில் 15.8% கசிவு ஏற்பட்டு சிந்தியதாகக் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 20 மில்லியன் ரேஷன் பொருட்கள் பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை. இதில் ரூ.69,108 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

News November 22, 2024

SKவிடம் மன்னிப்பு கேட்ட RJ பாலாஜி

image

நடிகர் சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டது குறித்து நடிகரும், இயக்குநருமான RJ பாலாஜி மனம் திறந்துள்ளார். ‘சொர்க்கவாசல்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், 2014இல் தனியார் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோது, சில மேடைகளில் SK அழுததை வைத்து கிண்டல் செய்ததாகவும் பிறகு அதை எண்ணி மனம் வருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறியுள்ளார். ‘சொர்க்கவாசல்’ படம் வரும் 29ஆம் தேதி ரிலீஸாகிறது.

News November 22, 2024

AUS மண்ணில் பண்ட் செய்த தரமான சம்பவம்

image

147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், AUS மண்ணில் அதிக ரன்கள் அடித்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இன்றைய முதல் நாள் ஆட்டத்தில், 37 ரன்களை பண்ட் அடித்தார். இதோடு சேர்த்து, ஆஸி., மண்ணில் அவர் மொத்தம் 661 ரன்களை எடுத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்கள் எடுத்த நிலையில், AUS அணி 67 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்துள்ளது.

News November 22, 2024

VOTER ID-யில் திருத்தம் செய்ய வேண்டுமா? நாளை முகாம்

image

VOTER ID-யில் முகவரி, புகைப்படம், தொகுதி தகவல்களை எப்படி திருத்துவது என தெரியாமல் சிலர் இருப்பர். அதேபோல், புதிதாக வாக்காளர் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது தெரியாமலும் சிலர் இருப்பர். அவர்களுக்காக கடந்த சனி, ஞாயிறுகளில் EC சிறப்பு முகாம்களை நடத்தியது. இதேபோல், நாளை (நவ.23), நாளை மறுநாளும் (நவ.24) சிறப்பு முகாம்களை அருகிலுள்ள வாக்குச்சாவடிகளில் நடத்தவுள்ளது. இந்தத் தகவல்களை பகிருங்க.

News November 22, 2024

பயத்தில் ஜெயக்குமார்.. கனிமொழி எம்.பி. பதிலடி

image

அதிமுக முன்னாள் நிதி அமைச்சர் ஜெயக்குமார் பயத்தில் இருப்பதாக திமுக எம்பி கனிமொழி சாடியுள்ளார். 2026 தேர்தலுக்கு பிறகு திமுகவுக்கு நிரந்தர வனவாசம் என ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, வேலை இல்லாததால் ஜெயக்குமார் தேர்தல் குறித்து ஆரூடம் சொல்வதாக விமர்சித்தார். 2026 தேர்தலை நினைத்து பயந்தே ஜெயக்குமார் அப்படி பேசியுள்ளார் என்றும் கனிமொழி சாடினார்.

error: Content is protected !!