News March 1, 2026

ஈரான் இஸ்ரேல் போரால் சிக்கிக்கொண்ட வங்கதேச வீரர்!

image

ஈரான் மீது அமெரிக்கா & இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தனது உம்ரா யாத்திரையை முடித்துக்கொண்டு ஜெட்டாவில் இருந்து திரும்ப முடியாமல் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம் தவித்து வருகிறார். நானும் ஆயிரக்கணக்கான பயணிகளும் ஜெட்டா ஏர்போர்ட்டில் இருக்கிறோம். எப்படி டாக்கா செல்வது என்று தெரியவில்லை என அவர் பேஸ்புக் பக்கத்தில் வேதனை தெரிவித்துள்ளார்.

News March 1, 2026

ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் தேர்வு!

image

US – இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இந்நிலையில் ஈரானின் இடைக்கால உச்ச தலைவராக அயதுல்லா அலி அலிரேஸா நியமிக்கப்பட்டுள்ளதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. நிரந்தர தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் இந்த பதவியில் நீடிப்பார். தற்போது அவர் நிபுணர்கள் சபையின் துணைத் தலைவராகவும், ஈரானின் மதக்கல்வி நிறுவனங்களின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

News March 1, 2026

BREAKING: இந்திய அணி அதிர்ச்சி தோல்வி

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியிலும் தோல்வியை தழுவி இந்திய மகளிர் அணி(0-3) வாஷ் அவுட் ஆகியுள்ளது. அலிசா ஹீலியின்(158) அதிரடியால் 409 ரன்களை ஆஸ்திரேலிய அணி குவித்தது. இமாலய இலக்கை சேஸ் செய்த இந்தியா தொடக்கம் முதலே விக்கெட்களை இழந்து தடுமாறியது. கடைசியில் 224 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாகியது. ஆஸ்திரேலியா தரப்பில் அலனா கிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

News March 1, 2026

உங்கள் பெயரின் முதல் எழுத்து எது? காத்திருக்கும் அதிர்ஷ்டம்

image

ஜோதிடத்தின் படி எந்த எழுத்தில் பெயர் தொடங்கினால் என்ன அர்த்தம் என்று பார்ப்போம். A-தலைமை பண்பு, B-அன்பு, C-துடிப்பு, D-ஒழுக்கம், E-படைப்புத்திறன், F-கோபம், G-பரிபூரணவாதி, H-இயற்கை விரும்பி, I-புதுமைவாதி, J-பலம், K-ரொமான்டிக், L-கவனம், M-பொறுமை, N-சுதந்திரம், O-ஒழுக்கம், P-நகைச்சுவை, Q-தைரியம், R-உழைப்பு, S-புகழ், T-நிர்வாகத்திறன், U-புத்திசாலி, V-வெற்றி, W-வசீகரம், X-துணிவு, Y-தனிமை, Z-கண்ணியம்.

News March 1, 2026

மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

image

OPS திமுகவில் இணைந்தாலும், அவருக்கு ஆதரவாக இருந்த பலரும் எதிர் நிலைப்பாட்டையே எடுத்து வருகின்றனர். கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் நேற்று அதிமுகவில் மீண்டும் இணைந்தனர். தற்போது, OPS-ன் உரிமை மீட்புக்குழு ஐடி பிரிவு தலைவராக இருந்த சுஜைனி மீண்டும் அதிமுகவில் சேர்ந்துள்ளார். EPS முன்னிலையில் அவர் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். OPS ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் இணைவது பற்றி உங்க கருத்து?

News March 1, 2026

ஈரானை சனிக்கிழமை காலை தாக்கியது ஏன்?

image

ஈரானை எந்நேரமும் அமெரிக்கா தாக்கலாம் என தகவல் வெளியான நேரத்தில் சனிக்கிழமை காலை திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. கமேனி முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவிருந்ததை அறிந்து தான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின் கமேனி தலைமறைவாக திட்டமிட்டிருந்தது குறித்து இஸ்ரேல் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. கமேனியை கொல்வதே இந்த தாக்குதலின் நோக்கமாக இருந்துள்ளது.

News March 1, 2026

நாளை தொடங்குகிறது அரசு பள்ளி மாணவர் சேர்க்கை

image

தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நாளை முதல் அடுத்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. அதற்கேற்ப பள்ளிகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 1, 2026

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு அதிக முதலீடு: PM மோடி

image

மதுரையில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ₹4,400 கோடிக்கும் அதிகமான திட்டங்களை PM மோடி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர்,
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிக முதலீடு செய்துள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ₹880 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும், ஆனால் பாஜக அரசு அதைவிட 9 மடங்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

News March 1, 2026

தேர்தல் அறிக்கை எப்போது முதல்முறையாக வந்தது?

image

1931-ல் கராச்சி காங்., மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்களை, 1937 தேர்தலில் காங்., தேர்தல் அறிக்கை வடிவில் முதல்முறையாக கொண்டுவந்தது. 1957 பேரவை தேர்தலின்போது ‘திராவிட நாடு’ என்ற தனிநாடு கோரிக்கையை தமிழக அரசியலில் முதல் தேர்தல் அறிக்கையாக திமுக முன்வைத்தது. 1967 தேர்தலில் தேர்தல் அறிக்கை (திமுக) முழு வடிவம் பெற்றது. அடுத்தடுத்து அதிமுக, பாமக கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கின.

News March 1, 2026

ஈரானை தாக்க அமெரிக்காவுக்கு உதவிய AI!

image

ஈரான் மீதான தாக்குதலில் US ஆந்த்ரோபிக் கிளவுட் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிரிகளைக் கண்காணிக்கவும் போரில் இலக்குகளை சரியாக அடையாளம் காணவும் AI பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. போரில் அதன் AI பயன்படுத்த மறுத்ததால், US சமீபத்தில் ஆந்த்ரோபிக் ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார். இருப்பினும், அதன் AI முன்னதாகவே US பாதுகாப்பு அமைப்பில் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!