News August 8, 2024
வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவியேற்பு

வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பதவியேற்றது. டாக்காவில் நடந்த நிகழ்வில் இடைக்கால அரசின் ஆலோசனை குழுவில் முகமது யூனுஸ் உடன் 17 பேர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். வங்கதேச வங்கியின் முன்னாள் ஆளுநர், முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் உள்ளிட்டோரும் பதவியேற்றுக் கொண்டனர்.
Similar News
News November 22, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை மாவட்டத்தில் இன்று (நவ.21) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 22, 2025
சூப்பர் ஓவரில் சூப்பராக சொதப்பிய இந்திய அணி..!

ரைசிங் ஸ்டார் ஆசியக் கோப்பை அரையிறுதியில் சூப்பர் ஓவர் வரை சென்று <<18351704>>இந்திய அணி தோல்வி<<>> அடைந்துள்ளது. பெரும் சோகம் என்னவென்றால், சூப்பர் ஓவரில் இந்தியா (0) ரன் எதுவுமே எடுக்கவில்லை. முதல் 2 பந்துகளில் (ஜிதேஷ், அஷுதோஷ்) 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டனர். இதனையடுத்து, களமிறங்கிய வங்கதேசம் அணி முதல் பந்தில் விக்கெட்டை இழந்தது. ஆனால், பவுலர் சுயாஷ் சிங் அடுத்த பந்தை வைட் ஆக வீசியதால் வங்கதேசம் வென்றது.
News November 22, 2025
ஓவர் டைம் வேலை செய்தால் டபுள் சம்பளம்… புதிய சட்டம்

இன்று அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களின் படி: *பெரும்பாலான துறைகளில் பணிநேரம் 8 -12 மணிநேரம் வரை, வாரத்துக்கு 48 மணிநேரம் மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் நேரம் (ஓவர் டைம்) வேலை செய்தால் இருமடங்கு சம்பளம், தேவைப்படும் சூழலில் தொழிலாளரிடம் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறுவது கட்டாயம் *ஊதியம், பணி நேரம் உள்ளிட்ட விதிகள் இனி டிஜிட்டல் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.


