News March 20, 2024
தங்கம் விலை மேலும் உயர்ந்தது

கடந்த வாரங்களில் தங்கம் விலை சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது விலை மளமளவென உயர்ந்துள்ளது. நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 உயர்ந்த நிலையில், இன்று ₹40 உயர்ந்து ₹49,120க்கும், கிராமுக்கு ₹5 உயர்ந்து ₹6,140க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் ₹80.00க்கும் கிலோ ₹80,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News October 21, 2025
புதுவீட்டில் தீபாவளியை கொண்டாடிய சமந்தா

கியூட் ரியாக்ஷன்களில் நம்மை கொள்ளைகொள்ளும் சமந்தா, தீபாவளியை கோலகலமாக கொண்டாடியுள்ளார். மும்பையில் புதிதாக அபார்ட்மெண்ட் வாங்கி செட்டிலான அவர், அங்கு தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுத்த போட்டோஸ் உடன், தனது வீட்டின் புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மேலே உள்ள அந்த போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.
News October 21, 2025
வக்கற்ற ஆட்சி நடத்தியவர் EPS: அமைச்சர் சக்கரபாணி

நெல்கொள்முதலை திமுக அரசு சரியாக செய்யவில்லை என<<18051682>> EPS குற்றம்சாட்டிய <<>>நிலையில் அமைச்சர் சக்கரபாணி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். உண்மைக்கு மாறாக அரசின் நெல் கொள்முதல் சாதனையை மறைக்கும் வகையில் EPS அவதூறு பரப்புவதாக அவர் சாடியுள்ளார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நெல்லுக்கான மாநில அரசின் ஊக்கத் தொகையை ஒரு பைசா கூட உயர்த்த வக்கற்ற ஆட்சி நடத்தியவர் என்றும் விமர்சித்துள்ளார்.
News October 21, 2025
நிதிஷ் ரெட்டி 3 பார்மட் வீரர்: ரோஹித் சர்மா

இளம் ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி எல்லா பார்மட்களிலும் சிறந்த வீரராக வருவார் என ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI-ல் நிதிஷ் அறிமுகமான போது, அவருக்கு ரோஹித்தான் தொப்பியை கொடுத்து கவுரவித்தார். பின்னர், இந்திய அணியில் நீண்ட தூரம் பயணிக்கும் திறமை நிதிஷுக்கு உள்ளதாகவும், இந்திய அணி அவருக்கு எப்போது துணையாக இருக்கும் எனவும் கூறினார்.