India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் வெள்ளைத்துரைபாண்டியன் (47). சிவகாசி திமுக மாநகர பொருளாளரான இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நிதி நிறுவனத்தில் திருத்தங்கலை சேர்ந்த அருண் ஆலங்குளம் கிளையில் மேனேஜராக வேலை செய்து வந்தார். அருண் ரூ.18 லட்சத்தை இழப்பு ஏற்படுத்தி நம்பிக்கை மோசடி செய்துள்ளார். இதுகுறித்து நிதி நிறுவன உரிமையாளர் கிடைத்த புகாரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விருதுநகர் மாவட்டத்தில் ஜவுளி துறையின் கட்டமைப்பை வலுப்படுத்தும் திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளி பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்காக குறைந்தபட்சம் 2 ஏக்கரில் 3 ஜவுளி உற்பத்தி தொழில் கூடங்கள் அமைக்க வேண்டும். எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர் துணிநூல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி விருதுநகர் ஹாஜிபி மேல்நிலைப் பள்ளியிலும், 24 ஆம் தேதி விருதுநகர் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குழந்தை திருமணம் தடைச் சட்டம் 2006 இன் படி குழந்தை திருமண சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கடந்த 2023 ஏப்ரல் 1 முதல் தற்போது 2024 மார்ச்.31 வரை 118 குழந்தை திருமணங்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து அவற்றின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் சிவகாசிக்கு நேரடியாக பட்டாசு வாங்க வருகின்றனர். பட்டாசுகளை வாங்கி செல்வோர் ரயில்,பேருந்துகளில் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் பட்டாசு கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேதியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றுபவர் ராமன். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் சர்வதேச அளவில் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி இந்த ஆண்டு பட்டியலில் இவர் இடம் பெற்றுள்ளார். இவரது சாதனையை கல்லூரி நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; விருதுநகர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி பொருட்களை விற்பனை செய்வது மற்றும் சேமித்து வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு இது போன்ற நெகிழி பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று (அக்.08) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்தில் சட்டப்படி தற்காலிக பட்டாசு கடை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் இணைய வழி (www.tnesevai.tn.gov.in) வாயிலாக வரும் 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றத்திற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று (அக்.8) நடைபெற்றது.14 புதிய முதலீட்டு திட்டங்களுக்காக ரூ.38,698 கோடி முதலீட்டுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், இந்த திட்டத்தின் மூலம் தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 4 மாவட்ட இளைஞர்கள் 46,931 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (54). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் சாட்சியாபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விபத்து ஏற்படுத்திய ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.