India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மாவட்டம் தோணுகால் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் தண்டியனேந்தல் பேருந்து நிறுத்தம் பின்புறம் சட்ட விதிமுறைகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கப்பட்ட கிரானைட் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கனிம வள காவலரை மாவட்ட ஆட்சியருக்கு ஆதரவாக வினோத போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. சாத்தூர் அருகே கனிமவளக் கொள்ளை தடுக்க தவறிய ஏழு பேரை மாவட்ட ஆட்சியர் சஸ்பெண்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

சாத்தூர் அருகே கனிமவளக் கொள்ளையை தடுக்க தவறியதாக சாத்தூர் வட்டாட்சியர் உள்ளிட்ட 7 பேரை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினரை கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் பணியிடை நீக்கத்தை ரத்து செய்யக்கோரி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஸ்ரீவி.வடகரை பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் திருமுக்குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். இந்த இறப்பு நிகழ்ச்சிக்காக சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் மாயன் (27) என்பவர் வந்திருந்தார். இவர் நேற்று மாலை சங்கூரணி பகுதியில் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஸ்ரீவி நகர் போலீஸார் வழக்கு பதிந்து 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுமார் 33 பேரிடம் ஆனிவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்த நிலையில் ஸ்ரீவி நீதி மன்றத்தில் கடந்த ஜன.9 இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை சிபிஐ க்கு மாற்றப்பட்ட நிலையில் ராஜேந்திரபாலாஜி, விஜயநல்லதம்பி, மாரியப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த நிலையில் விரைவில் விசாரணை தொடங்க உள்ளது.

ஸ்ரீவி. ரைட்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன்.இவர் திருமுக்குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானார்.இந்த இறப்பு நிகழ்ச்சிக்காக சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் மாயன் (24) என்பவர் வந்திருந்தார்.இவர் நேற்று மாலை சங்கூரணி பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.உடலை மீட்டு ஸ்ரீவி. நகர் போலீஸார் கொலை செய்யப்பட்டாரா என சிலரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு, மக்கள் செய்தி தொடர்பு துறை சார்பில் லவ்டிஎன் வினாடிவினா போட்டி 17.02.25 அன்று நடக்கிறது. தமிழ்நாடு திட்டங்களால் பயன் பெற்ற மக்களின் அன்பையும், மனநிலையையும் அறியும் விதமாகச் X, Instagram, Facebook, WhatsApp, YouTube போன்ற சமூக ஊடகங்களில் போட்டிகள் நடத்தப்படும்.வெற்றிபெறும் நடத்தப்படும்.வெற்றிபெறும் அரசு சார்பில் பரிசு,பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.

விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள 56 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மினி பஸ்களை இயக்க உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை ஆன்லைன் மூலம் ரூ.1600 செலுத்தி பெற்று அதனை பூர்த்தி செய்து அதனை உரிய சான்றுகளுடன் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 28.02.2025- க்குள் நேரில் சமர்ப்பிக்கலாம்.

இ.குமாரலிங்கபுரம் பெரியகுளம் கண்மாயில் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட 12 லாரிகளை வச்சகாரப்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். கனிம வளக் கொள்ளையை தடுக்க தவறியதாக விருதுநகர் மாவட்டத்தில் 7 பேரை சஸ்பெண்ட் செய்து ஆட்சியர் உத்தரவிட்டார். இதில் பறிமுதல் செய்யப்பட்ட 12 லாரிகளில் 4 மட்டுமே காவல் நிலைய வளாகத்தில் நின்றது பெரும் பேசு பொருளான நிலையில் மாயமான 8 லாரிகள் மீண்டும் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டன.

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளான. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கே <

ஸ்ரீவி அருகேயுள்ள திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் மாசி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.