Virudunagar

News February 25, 2025

சிவகாசியில் சித்திரை திருவிழா பொருட்காட்சி

image

சிவகாசியில் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் சித்திரை பொருட்காட்சி துவங்க உள்ளது. ஜேசீஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக நடைபெறும் இந்த பிரமாண்ட பொருட்காட்சியில் ஸ்டால்கள் அமைக்க விரும்புவோர் முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு.

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். விருதுநகரில் மட்டும் 46 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். *மறக்காம ஷேர் பண்ணுங்க

News February 24, 2025

சாத்தூர் ஆர்.ஐ வீட்டில் பெண் கைவரிசை

image

சாத்துார் வருவாய் ஆய்வாளரின்(ஆர்.ஐ.,) வீட்டில் ஆக.29ல் ரூ.1 லட்சம், 2.1 பவுன் தங்க நகைகள் திருடு போனது. இது குறித்து விசாரித்த போது வீட்டில் வேலை பார்த்த காயத்ரி(35), திருடியதை ஒப்புக்கொண்டார். அதில் ரூ.35 ஆயிரத்தை திருப்பி கொடுத்து மீதமுள்ள பணம், நகைகளை பிப்ரவரிக்குள் தருவதாக தெரிவித்தவர் திரும்ப தரவில்லை. இதனால் ஆர்.ஐயின் கணவர் ஊரகப்போலீசில் புகார் அளித்தார். போலீசார் காயத்ரியை கைது செய்தனர்.

News February 24, 2025

வருவாய்த்துறை அமைச்சரின் நாளைய நிகழ்ச்சிகள்

image

அருப்புக்கோட்டை தெற்கு தெரு முருகன் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருந்தகத்தினை நாளை (பிப்.24) காலை 10 மணி அளவில் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ திறந்து வைக்க உள்ளார்.‌ அதனை தொடர்ந்து மாலை வேல்ராஜன் அரங்கில் நடைபெற உள்ள சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்க உள்ளார்.

News February 23, 2025

சிவகாசி டிஎஸ்பி மீது திமுக விமர்சனம்

image

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் அதிமுக சார்பில், மக்கள் பயன்படுத்தும் கழிப்பறையை வழி மறித்து நீளமான பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமீறல் சிவகாசிக்கு சில மாதங்களுக்கு முன்பு வந்துள்ள டிஎஸ்பி பாஸ்கரன் வந்த பிறகுதான் நடைமுறைக்கு வந்துள்ளதாக திமுக மாநகராட்சி செயலாளர் உதயசூரியன் தனது முகநூலில் விமர்ச்சித்து பதிவிட்டுள்ளார்.

News February 23, 2025

வத்திராயிருப்பில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கும் இவரது மகனுக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராமகிருஷ்ணனும் மகன் ஸ்ரீராமும் குடிபோதையில் சண்டை போட்டு வந்துள்ளனர். இதனால் மன வேதனை அடைந்த ராமகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 23, 2025

ராணுவவீரர், காவலர் கூட்டாக சேர்ந்து 30 பவுன் நகை திருட்டு

image

காரியாபட்டி அருகே செவல்பட்டியில் சுப்புராஜ் வீட்டில் பிப்.4 அன்று பீரோவை உடைத்து 30 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர் கணேசன், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் கண்ணன் குமாரும் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து கணேசனை போலீசார் கைது செய்து 16 பவுனை மீட்ட நிலையில் கண்ணன் குமாரை தேடி வருகின்றனர்,

News February 23, 2025

சிவகாசியில் 9 ஆண்டுகளாக திணறும் போலீஸ்

image

சிவகாசி, நதிக்குடியைச் சேர்ந்த ராஜ் என்பவர் 9.4.2016 அன்று பட்டாசு தொழிலாளர்களுக்கு சம்பளம், போனஸ் வழங்க டூவிலரில் ரூ.17.77 லட்சத்தை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது இவரை வழிமறித்த மர்மநபர்கள் ராஜை வெட்டிப் படுகொலை செய்து அவரிடமிருந்த ரூ.17.77 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவம் நடந்து 9 ஆண்டுகளாகியும் போலீசார் குற்றவாளைகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

News February 22, 2025

வெம்பக்கோட்டை ஒரு விசித்திரக்கோட்டை தான்

image

கிழடியில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் அவ்வப்போது கிடைக்கப் பெற்று வருகிறது. அந்தவகையில், விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கிடைக்கப் பெற்று வருகிறது. அண்மையில், சங்கினால் செய்யப்பட்ட பதக்கம் கண்டெடுக்கப்பட்டது கூடுதல் சிறப்பு.தொடர்ந்து தமிழர்களின் நாகரீகம் கண்டறியும் வெம்பக்கோட்டை ஒரு விசித்திரக்கோட்டை தான்.

News February 22, 2025

தேர்வு முடியும் வரை மின்தடை இல்லை – மின்வாரியம்

image

அருப்புக்கோட்டை அருகே பரளச்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட செங்குளம், கீழ்க்குடி, வடக்கு நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 13ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், பள்ளி தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் அனைத்து பள்ளி தேர்வுகளும் முடிவடையும் வரையிலும் பரளச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர மின்தடை இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!