India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இளையராஜைவை கருவறைக்குள் அனுமதிக்காத விவகாரம் குறித்து இந்துசமய அறநிலையத்துறை இணை அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ திருக்கோவிலில் மரபு வழக்கப்படி அர்த்த மண்டபம் உள்ளே செல்ல கோவில் அர்ச்சகர், மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை; இளையராஜா மண்டபம் வாசல் படியில் இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என ஜீயர் கூறியதை அவரும் ஒப்புக்கொண்டார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்யபாசுரம் இசைக்கச்சேரியில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு பின் அங்குள்ள ஆண்டாள் கோயிலில் வழிபாடு செய்தார். இந்நிகழ்வில் கருவறைக்குள் சென்ற இளையராஜைவை வெளியேறுமாறு கூறியதாக தகவல் வெளியானது. பின், கருவறை வெளியே நின்றே இளையராஜா வழிபாடு செய்தார்.
இதுகுறித்து பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்ற நிலையில், உங்களுடைய கருத்தினை COMMENT செய்யவும் .
ஸ்ரீ வில்லிபுத்தூரில் நடைபெற்ற திவ்யபாசுரம் இசைக்கச்சேரியில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டு பின் அங்குள்ள ஆண்டாள் கோயிலில் வழிபாடு செய்தார். இந்நிகழ்வில் ஜீயர்கள் சிலரும் பங்கேற்றனர்; பின் ஜீயர்களுடம் கருவறைக்குள் சென்ற இளையராஜைவை வெளியேறுமாறு ஜீயர்களும், பக்தர்களும் கூறியதாக தகவல் வெளியானது. பின், கருவறை வெளியே நின்றே இளையராஜா வழிபாடு செய்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (டிச.16) மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை குறைத்திர் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு அளிக்கலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் இன்று (டிச.15) தெரிவித்துள்ளது.
குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினா போட்டி விருதுநகர் மாவட்டத்தில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கலந்துகொள்ள 9361613548, 8667573086 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதல் பரிசு ரூ. 2 லட்சம், 2ஆம் பரிசு 1.5 லட்சம், 3ஆம் பரிசு 1 லட்சம்.
ராஜபாளையம் அருகே சேத்தூரைச் சேர்ந்தவர் கணேசன்(45). கடன் தொல்லையால் மனவேதனையில் இருந்த இவர் நேற்று முன்தினம் அவரது மனைவி முத்துமாரி, மகள் குருபிரியா(15), மகன் சபரிநாதன்(13) ஆகியோருக்கு பூச்சி மாத்திரை கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் முத்துமாரி உயிரிழந்த நிலையில் மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கணேசனும் உயிரிழந்தார்.
சிவகாசியில் கடந்த இரு நாட்களுக்கு முன் சாலையில் சுற்றித் திரிந்த 35 மாடுகளை சப் கலெக்டர் உத்தரவின் பேரில் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் இதுவரை 21 மாடுகளுக்கு மொத்தம் ரூ.89,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாடுகள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும் கன்றுகள், கோயில் மாடுகள் அபராதம் இன்றி விடுவிக்கப்பட்டன.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு தலைவர் முதன்மை நீதிபதி ஜெயக்குமார் தலைமையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் இன்று (டிச.14) நடைபெற்றது. இதில் சிவில், வங்கி வாராக்கடன், காசோலை தொடர்பான வழக்குகள் உட்பட 5,234 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் 2,878 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு, ரூ.14,09,04,905 தீர்வு தொகை வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் கரிசல் இலக்கியத்தைக் கொண்டாடும் மாபெரும் இலக்கியத் திருவிழாவாக திகழும் ‘கரிசல் இலக்கியத் திருவிழா 2024’ இன்று (டிச.14) துவங்கியது. இந்த விழாவில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி காணொளி காட்சி வழியாக விழாப் பேரூரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பலர் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று(டிச.14) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் வருவாய் கோட்டங்களில் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. அந்தந்த ஆர்டிஓ-க்கள் தலைமையில் நடைபெறும் இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பயன்பட வேண்டுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.