Virudunagar

News February 16, 2026

சதுரகிரி மலையேறிய பக்தர் மரணம்

image

மகா சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் சென்ற தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரைச் சேர்ந்த சுடலை (60), மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். வத்திராயிருப்பு தாணிப்பாறை வழியாக ஏறிய அவர் இரட்டை லிங்கம் அருகே மயங்கி விழுந்தார். அவரது உடல் உடற்கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனை அனுப்பப்பட்டது. சாப்டூர் காவல் நிலையம் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

News February 15, 2026

விருதுநகரில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

விருதுநகர் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் விருதுநகர் வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000474, 9445000475, 9944242782 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.

News February 15, 2026

விருதுநகர் மக்களே இனி LINE-ல் நிற்க தேவையில்லை..!

image

விருதுநகர் மக்களே, மின் கட்டணங்களை வரிசையில நின்னு கட்டறீங்களா? இனி அது தேவை இல்லை.. வாட்ஸ் ஆப்-ல மின் கட்டணம் செலுத்த வழி இருக்கு..

1.வாட்ஸ்அப்பில் 9498794987 (TANGEDCO) எண்ணுக்கு Hi-ஐ அனுப்புங்க

2. “Bill Payment” தேர்வு செய்து உங்கள் Consumer Number பதிவு பண்ணுங்க.

3. பில் தொகை சரிபார்த்து, UPI வழியாக பணம் செலுத்துங்க.

4. ரசீது வாட்ஸ்அப்பில் கிடைக்கும்.

இத அனைவருக்கும் உடனே SHARE பண்ணுங்க!

News February 15, 2026

விருதுநகர்: போஸ்ட் ஆபீஸில் வேலை

image

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்:2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>

நாளை கடைசி நாள்; உங்கள் நண்பர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க!

News February 15, 2026

விருதுநகர் மக்களே, பிரச்னையா? கால் பண்ணுங்க

image

விருதுநகர் மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். 9791322979 என்ற எண்ணில் வாட்ஸாப் (அ) கால் செய்தோ தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவித்து கொள்ளலாம். மாவட்ட அறை கட்டுப்பாட்டு உதவி எண் – 1077. இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News February 15, 2026

விருதுநகர்: வாகனம் மோதி பெண் பலி

image

விருதுநகர் பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் நவராஜ் (63). இவர் மனைவி ரெஜினா (54) உடன் இரு சக்கர வாகனத்தில் சூலக்கரை நான்கு வழிச்சாலை அருகே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தம்பதியர் சாலையை கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ரெஜினா உயிரிழந்தார். மேலும் கால் முறிவுடன் பலத்த காயமடைந்த நவராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News February 14, 2026

விருதுநகர் : இனி சிலிண்டர் புக் பண்ண மிஸ்டு கால்…!

image

விருதுநகர் மக்களே (Bharatgas, HP, Indane) கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும்.
Bharatgas: 77150 12345
HP: 94936 02222
Indane:84549 55555
இந்த எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News February 14, 2026

சிவகாசி அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

image

சிவகாசி அருகே பள்ளபட்டி முத்துராமலிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் லோடுமேன் மாரியப்பன் (43). இவர் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் உள்ளவர்களிடம் நான் சாக போகிறேன் என்று கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடம்பன்குளம் கண்மாய் பகுதிக்கு சென்று பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News February 14, 2026

விருதுநகர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 14, 2026

விருதுநகர்: WhatsApp-ல் இலவச சட்ட ஆலோசனை வேணுமா?

image

விருதுநகர் மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க உடனே SHARE பண்ணுங்க

error: Content is protected !!