India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலாளர் பட்டாசு உற்பத்தி கடந்த ஆண்டு சுமார் 6000 கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. தீபாவளி பண்டிகை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு உற்பத்தி பணிகள் இன்று வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் பூஜைகளுடன் துவங்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் இன்று சிறப்பு பூஜை செய்து பணிகளை துவக்கி உள்ளனர்.
சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் பழைய நீதிமன்றம் அருகே பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு Way2 இல் செய்தி வெளியிடப்பட்டது. இதுகுறித்தான செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து தற்போது நெடுஞ்சாலை துறையினர் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்துள்ளனர். இதனால் வாகன ஒட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவி.அருகே டி.மானகசேரி பகுதியைச் சேர்ந்தவர் பால்சாமி(65),வைரமுத்து, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இன்று காலை பைக்கில் மானகசேரியில் இருந்து சிவகாசி – ஸ்ரீவி சாலையில் கொத்தனார் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் சிவகாசியில் இருந்து ஸ்ரீவிக்கு வந்த தனியார் பேருந்து இவர்கள் மீது மோதியதில் பால்சாமி சம்பவ இடத்திலே பலியானார்.மேலும் 3 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்ட கரிசல் இலக்கிய கழகத்தின் 2வது செயற்குழு கூட்டம் கரிசல் இலக்கிய கழகத் தலைவர் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2வது கரிசல் இலக்கியத் திருவிழா வரும் டிசம்பர் 14,15 ஆகிய இரு தினங்களில் நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியை முன்னிட்டு பொதுமக்களுக்கான மரபுக் கவிதை எழுதும் போட்டிக்கு vnrkarisaltp2024@gmail.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தில்,சித்தர் பீடம் பகுதியில் 3 யானைகள் அப்பகுதியில் உள்ள தோப்புகளில் புகுந்து மா, தென்னை, பனை மரங்களை சேதப்படுத்தியுள்ளன. காலையில் தோப்பிற்கு சென்ற விவசாயிகள் இதனைப் பார்த்து அச்சமடைந்தனர். தோப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் யானைகள் நடமாட்டத்தை முழு அளவில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தாட்கோ நிறுவனத்தின் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் நிறுவனச் செயலாளர் செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நன்கொடையாளர் விரும்பும் நாளில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வங்கி கணக்கு இந்திய ஓவர்சீஸ் வங்கியில் உள்ளதால், வங்கி சார்பில் க்யூ ஆர் குறியீடு மூலம் நன்கொடை அளிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான திட்டத்திற்கு க்யூ ஆர் குறியீடு மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு சிகாமணி (70) என்பவரை அவரது மனைவி பரமேஸ்வரி மண்ணெண்ணை ஊற்றி எரித்து கொலை செய்தார். இவ்வழக்கில் விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம், பரமேஸ்வரி என்பவர் குற்றவாளி என அறிவித்து அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் ரூ.500மும், அபராதத்தை கட்ட தவறினால் மூன்று மாதம் சிறை தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை இணைந்து நடத்தும் பிறப்பு முதல் 18 வயது மாற்றுத்திறன் உடைய குழந்தைகளுக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய அடையாள அட்டை பெறுவதற்கான மருத்துவ முகாம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பல்வேறு தேதிகளில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று தெரிவித்துள்ளார்.
சாத்தூர் மெயின்ரோட்டில் வங்கிகள், பள்ளிகள், கோவில்கள், வணிக நிறுவனங்கள் உள்ள சாலையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புச்சுவர் பகுதியில் மணல் குவியல்கள் அதிகமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வே டு நியூஸ் செய்தி வெளியானதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் மணல் குவியலை அகற்றி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.