Virudunagar

News January 2, 2025

பாலிபேக் நிறுவனத்திற்கு ரூ.25000 அபராதம்

image

சிவகாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.அப்போது பள்ளப்பட்டி சாலையில் இயங்கி வரும் பாலிபேக் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி மாநகராட்சி உரிமம் இல்லாமல் அந்த நிறுவனம் செயல்பட்டு வந்ததும் தெரியவந்ததால், அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர்.

News January 2, 2025

மாநகராட்சியுடன் இணையும் 9 ஊராட்சிகள்

image

தமிழ்நாட்டில் 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கம் செய்வதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சிவகாசி மாநகராட்சி எல்லை விரிவாக்கத்திற்காக ஆனையூர், சித்துராஜபுரம், நாரணாபுரம், விஸ்வநாதம், பள்ளப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம், அனுப்பன்குளம், சாமிநத்தம், தேவர்குளம் ஆகிய 9 கிராம ஊராட்சிகள் சிவகாசி மாநகராட்சியுடன் இனிய உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

News January 1, 2025

இரண்டாம் நாளில் எழுந்தருளிய சுவாமிகள்

image

ஸ்ரீவி.ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.2 ஆம் நாளான இன்று ஆண்டாள் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வடபத்ரசாயி சந்நிதி முன் உள்ள கோபால விலாசம் என்னும் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார்ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

News January 1, 2025

விருதுநகரில் ஓவியப் போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு

image

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தைத்திங்கள் தமிழர் மாதத்தையொட்டி தமிழ், தமிழர், தமிழ்நாடு – பண்பாடும் பெருமைகளும் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளது. அருப்புக்கோட்டை அல் அமீன் பள்ளி, சிவகாசி எஸ்.ஹெச்.என்.வி மெட்ரிக் பள்ளியில் ஜன.4 அன்று காலை 10 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு 93616 13548, 86675 73086 இல் தொடர்பு கொள்ளலாம்.

News January 1, 2025

முதல் பெண் போலீஸ் ஜீப் ஓட்டுநர்

image

சாத்தூர் அருகே கொம் மங்கியாபுரத்தைச் சேர்ந்தவர் முதல் பட்டதாரி ரேணுகா. 2 பெண் குழந்தைகளுக்கு தாயான இவர் தமிழ்நாடு காவல்துறையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இக்கிராமத்தில் இருந்து முதல் பெண் காவலர் என்ற பெருமையுடன் விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஜீப் ஓட்டும் ஒரே பெண் டிரைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நம்ம ஊர் பெண்ணுக்கு வாழ்த்துக்களை CONNENT இல் தெரிவிக்கலாம்.

News January 1, 2025

ஆண்டாள்,ரங்கமன்னாருக்கு சிறப்பு பூஜை

image

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று ஆண்டாள், ரங்கமன்னருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து ஆண்டாள்,ரங்கமன்னார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

News January 1, 2025

ராஜபாளையம் உழவர் சந்தையில் காய்கறி விலை நிலவரம்

image

ராஜபாளையம் உழவர் சந்தையில் ஜனவரி 1ம்தேதி இன்றைய காய்கறிவிலை நிலவரம் கத்தரிக்காய் ரூ.70, வெண்டைக்காய் ரூ.25, தக்காளி கிலோ ரூ.25, அவரைக்காய் ரூ. 140.சேனைக்கிழங்குகிலோ ரூ70, கருணைக்கிழங்கு ரூ70. வெங்காயம் ரூ.80, கேரட் ரூ.62, முருங்கை பீன்ஸ் ரூ 90.பட்டர் பீன்ஸ் ரூ.240, பச்சை பட்டாணி ரூ160, பீட்ரூட் ரூ70,  உருளைக்கிழங்கு ரூ.50 உழவர் சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.

News January 1, 2025

கைரேகையுடன் கிடைத்த தொல்பொருள்

image

விருதுநகர், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் 2,700க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுடுமண்ணால் ஆன நீள்வட்டம், கூம்பு வடிவம், அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காய்கள் கண்டறியப்பட்டன. அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காயில், தயாரித்தவர்களின் கைரேகை பதிவாகி நிலையில் கிடைப்பது அரிது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். *ஷேர்

News December 31, 2024

EXCLUSIVE விருதுநகரில் 2024 வெடி விபத்தில் 45 பேர் பலி

image

விருதுநகர் மாவட்டத்தின் பிரதான தொழிலான பட்டாசு உற்பத்தி தொழில் தொடர் விபத்தால் ஆபத்து நிறைந்த தொழிலாக உள்ளது. 2024 ஆண்டில் இதுவரை 21 பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டு 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக உயிர்பலி ஏற்பட்ட ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது. முன்னதாக நாட்டை உலுக்கிய முதலிபட்டி பட்டாசு விபத்து ஏற்பட்ட 2012ல் 55 பேர் உயிரிழந்ததே அதிகபட்ச உயிர்பலி ஏற்பட்ட ஆண்டாக அமைந்துள்ளது.

News December 31, 2024

ஸ்ரீவி.ஆண்டாள் கோவிலில் அமைச்சர் சுவாமி தரிசனம்

image

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக அமைச்சரை ஆண்டாள் கோயில் அலுவலர்கள் மற்றும் பட்டர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து ஆண்டாள் கோயில், ஆண்டாள் பிறந்த நந்தவனம், வடபத்திர சன்னதி உள்ளிட்டவைகளில் சாமி தரிசனம் செய்தார்.

error: Content is protected !!