India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகாசியில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் பொருட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்துவதற்காக போலீசார் சார்பில் நகரில் முக்கிய இடங்களில் 299 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதாக பிடிப்பதுடன், பழைய குற்றவாளிகளை அடையாளம் காணுதல், கண்காணிப்பு பணியை எளிதாக்க முடியும். இதேபோல் காரியாபட்டியில் 35, அருப்புக்கோட்டையில் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு இன்று (மார்ச்.23) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் மக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் 2 முதல்வர்களை கொடுத்துள்ளது. காமராஜரை எல்லோருக்கும் தெரியும். பெரும்பான்மையானோருக்கு தெரியாதவர்தான் பி.எஸ்.குமாரசாமி ராஜா. ராஜப்பாளையத்தைச் சேர்ந்த இவர் 1898 ஆம் ஆண்டு பிறந்தார். இவர், சென்னை மாகாணத்தின் கடைசி முதல்வராகவும்(1959-60), சென்னை மாநிலத்தின் முதல் முதல்வராகவும்(1950-52) இருந்துள்ளார். இவரை பற்றி தெரிந்தால் கமெண்ட் பன்னுங்க. தெரியாத நண்பர்களுக்கு பகிரவும்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி கல்வி மாவட்டத்தில் 189 தேர்வு மையங்களிலும் விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 168 பள்ளிகளிலும் என மொத்தம் 357 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று நடைபெறுகிறது. இதில் சிவகாசி கல்வி மாவட்டத்தில் 14,874 மாணவ மாணவிகளும், விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 10,895 மாணவ மாணவிகளும் என மொத்தம் 25,769 பேர் எழுதுகின்றனர்.

சிவகாசி மாநகராட்சியில் சொத்துவரி, வணிகவரி உள்ளிட்ட வரி இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 25 கோடிக்கு வரி வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டில் நேற்று வரை 96.5 சதவீதம் கூட வர முடியாத நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நிர்வாக ரீதியான பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. கடந்த வரி வசூலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த சிவகாசி மாநகராட்சி, தற்போது 23வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில், மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கே வி எஸ் வளாகத்தில் பொருட்காட்சி ஆரம்பமாகிறது. இந்த பொருட்காட்சி (மார்ச்.28) இன்று முதல் ஏப்ரல்.20 வரை நடைபெற இருக்கிறது. இதற்கான நுழைவு கட்டணம் ரூ.30 முதல் ரூ100 வரை (கட்டணம் நாட்களுக்கேற்ப மாறுபடும்) மக்கள் அனைவரும் பங்குனி பொங்கல் திருவிழாவை பொருட்காட்சியுடன் கொண்டாடி மகிழுங்கள் *ஷேர் பண்ணுங்க

திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளஸ் 1 கணக்கு பதிவியியல், வேதியியல் பாட தேர்வு நடந்து கொண்டிருந்தது. பள்ளி ஆய்வக அறையில் மாற்றுத்திறன் மாணவர்கள் மற்றும் உதவியாக ஆசிரியர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். காலை 11:35 மணியளவில் நாகப்பாம்பு ஒன்று தேர்வு அறைக்குள் நுழைந்தது. இதனை கண்ட மாணவர்கள் அலறியடித்து வெளியேறினர். பின் தீயணைப்பு வீரர்கள் பாம்பை பிடித்து காட்டுக்குள் விட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோட்டூர் குருசாமி சித்தர் சதுரகிரி மலைக்குச் சென்று அங்குள்ள சித்தர்களுக்கு தொண்டு செய்து வந்துள்ளார்.40 ஆண்டு கழித்து மலையை விட்டு இறங்கி சொந்த ஊரான கோட்டூரில் தங்கினார்.இவரிடம் குழந்தையின்மை, தீராத நோய்க்கு தீர்வு கேட்டு வருபவர்களிடம் மஞ்சள் கிழங்கு, ஆமணக்கு எண்ணெய் கொடுத்து அனுப்புவதும் பின்னர் அது சரியாவதாக நம்பப்படுகிறது.பின் அவர் ஜீவசமாதி அடைந்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10, 12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது. இதில் சேர விருப்பமுள்ள இளைஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஏப்.10 வரை பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு ஸ்ரீவியில் உள்ள முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை அனுகலாம்.

சிவகாசியில் டிரான்ஸ்பார்மர்களை மறைப்பதற்கு லேசர் பிரிண்டிங் முறையில் திருக்குறள் எழுதி பாதுகாப்பு தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. சிறுகுளம் கண்மாய் கரை நடைபாதையில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை சுற்றி பாதுகாப்பிற்காக இரும்பில் லேசர் பிரிண்டிங் முறையில் திருக்குறளை எழுதி வைத்துள்ளனர். இரவில் திருக்குறள் தெரியும் வகையில் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.