India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் பாலத்தில் நேற்று (பிப்.27) அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக பந்தல்குடி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து இறந்தது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் ஏகாதசியன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள கண்ணாடி மாளிகையில் ஆண்டாள் ரங்க மன்னார் எழுந்தருளுவது வழக்கம். இந்நிலையில் இன்று இரவு மாசி மாத ஏகாதசியை முன்னிட்டு ஆண்டாள் ரங்க மன்னார் கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மக்களே, கரண்ட்பில், தண்ணீர் வரி, கேஸ்பில், ரீசார்ஜ் என அனைத்துமே செலுத்த மத்திய அரசின் NPCI சார்பாக உங்க வாட்ஸ் ஆப்பில் இருந்து BILL செலுத்த அறிமுகம் செய்திருக்கு. 9167777776 எண்ணில் உங்க CONSUMER NUMBER -ஐ பதிவிட்டால் போதும். பணம் எவ்வளவுன்னு அதுவே காட்டும். அதை நீங்கள் வாட்ஸ் ஆப்பிலே செலுத்தலாம். மாதந்தோறும் Hi அனுப்பி BILL-ஐ செலுத்துங்க. இந்த நல்ல தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

விருதுநகர் மக்களே, உங்க வங்கி கணக்கில் பணம் எவ்வளவு இருக்கு? பண பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்க இனிமே அடிக்கடி வங்கிக்கும் (அ) UPI-ஐ திறந்து பார்க்க தேவையில்லை
Indian bank: 87544 24242
SBI: 90226 90226
HDFC: 70700 22222
Axis: 7036165000
Canara Bank – 9076030001
இந்த நம்பர்களுக்கு வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி அனுப்பி உங்க பேலன்ஸ், பரிவர்த்தனைகள் தெரிஞ்சுக்கலாம். மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு<

விருதுநகர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

விருதுநகரில் ரூ.12.43 கோடி மதிப்பில் அரசு அருங்காட்சியகத்தை நேற்று முதல்வர் காணொலியில் திறந்தார்; தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ.181 கோடியில் சிவகாசி – விருதுநகர், அழகாபுரி – விருதுநகர் சாலைகள் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்த பணிகள் தொடங்கின. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் ராம் நகர் இமானுவேல் (61) தென்காசி சென்றிருந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து 70 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டன. இதனை விசாரித்த ராஜபாளையம் வடக்கு போலீசார் மதுரை காளவாசல் மகேந்திரன் (34), எரியோடை சாமுவேல் (23), அருண்பாண்டியன் (29) ஆகியோரை கைது செய்தனர். மூவரும் மதுரை மத்திய சிறையில் பழகி, பல இடங்களில் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

சிவகாசி அருகே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பகுதியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இவரது பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து தனியாக இருந்தார். அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சித்தப்பா உறவு முறையான முருகன்(46), பாலியல் தொந்தரவு கொடுத்தார். அவரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் EX அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் தனது பாஸ்போர்ட்டை மீண்டும் வழங்க வேண்டும், ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்த கோரி ராஜேந்திரபாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் பாஸ்போர்ட்டை அவரிடம் மீண்டும் ஒப்படைக்கவும், வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் இனி மாவட்ட நீதிமன்றத்திலேயே அனுமதி பெறலாம் என உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.