India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் பகுதியை சேர்ந்தவர்கள் அழகர்சாமி(24), பாலசுப்பிரமணி(26). நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் போக்சோ நீதிமன்ற நீதிபதி அழகர்சாமி, பாலசுப்பிரமணி ஆகிய இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

வெம்பக்கோட்டை அருகே வெற்றிலையூரணியில் விஜயகுமாருக்கு சொந்தமான ரோஸ் பட்டாசு ஆலை வளாகத்தில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பிலிருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், தொழிலாளர்கள் இன்றி பூட்டிக் கிடந்த குடியிருப்பில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மின் வயர் அறுந்து விழுந்ததால் பட்டாசுகள் வெடித்து சிதறி குடியிருப்பு சேதமடைந்தது தெரியவந்தது.

விருதுநகர் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

திருச்சுழி – காரியாபட்டி சாலையில் புலிக்குறிச்சி காட்டுப் பகுதியில் நேற்று பண்ணை மூன்றடைப்பை சேர்ந்த மூதாட்டி அம்பிகா என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த விசாரனையில் தோப்பூரை சேர்ந்த லோகாம்பாள்(39), அவரது 17 வயது மகள் ஆகியோர் சுபநிகழ்ச்சிக்காக அழைத்துச் செல்வதாக கூறி மூதாடியை பைக்கில் அழைத்துச் சென்று மூதாட்டியை கொலை செய்து நகையை பறித்து சென்ற நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <

விருதுநகர் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

விருதுநகர், ஆமத்தூரை சேர்ந்த வைஷ்ணவி, சிவில் சர்வீசஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 492-வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். விருதுநகர் பள்ளிப் படிப்பை முடித்து, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் படித்தார். “நான் முதல்வன்” திட்டத்தில் பயிற்சி பெற்று 3-வது முயற்சியில் வெற்றி பெற்றார். பட்டாசு ஆலைகள் அதிகம் உள்ள ஆமத்தூரில் இருந்து சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் இவர். *SHARE

சிவகாசியில் 10 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த எலக்ட்ரிக் கடை உரிமையாளர் ரவீந்திரன்(52) தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் கொண்டு வந்த சிறுமியிடம் அவர் அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதை சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் ரவீந்திரனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வத்திராயிருப்பு தாலுகா அயன்கரிசல்குளம் கிராமத்தில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் வீட்டில் வைத்து மக்களுக்கு மருத்துவம் பார்த்ததாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் சென்றுள்ளது. இதன் அடிப்படையில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன் ஆய்வு செய்த போது, மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து வைரமுத்துவை கைது செய்தனர்.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று துவங்கி ஏப்.6 வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 115 மையங்களில் 11,966 மாணவர்களும், 12,526 மாணவிகளும், தனித்தேர்வர்கள் 666 பேரும் என மொத்தம் 25,158 மாணவர்கள் எழுதுகின்றனர். மேலும் தேர்வினை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.