Virudunagar

News February 1, 2025

விருதுநகர் த.வெ.க நிர்வாகிகளை நியமனம் செய்து விஜய் அறிவிப்பு

image

தமிழக வெற்றி கழகத்தின் புதியதாக மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக செல்வம், இணைச் செயலாளராக முத்துப்பாண்டி, பொருளாளராக சங்கர் கணபதி, துணைச் செயலாளராக மரகதமணி, நாகஜோதி உட்பட 10க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News February 1, 2025

மத்திய பட்ஜெட்டிற்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் கண்டனம்

image

நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு, ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டின் பங்களிப்பிற்கு அங்கீகாரம் இல்லை. குறைந்த பங்களிப்பு செய்யும் மாநிலங்கள் அதிக ஆதாயம் அடைந்துள்ளன என தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

News February 1, 2025

விருதுநகரில் கோழிகளுக்கு நோய் தடுப்பூசி முகாம்

image

கால்நடை பராமரிப்புதுறை மூலம் விருதுநகர் மாவட்டத்தில் தற்போது கோழிகளை தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்க்கான தடுப்பூசி முகாம்களை இன்று முதல் பிப்.14 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கோழிகள் வளர்ப்போர், கோழிப்பண்ணையாளர்கள் 8 வார வயதிற்குள்ள கோழிகள், குஞ்சுகளுக்கு தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம். மாவட்டத்திற்கு இதற்கு 1.68 லட்சம் டோஸ் மருந்துகள் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்

News February 1, 2025

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

image

ராஜபாளையம் ராம்கோ பேப்ரிக் யூனிட்டிற்கு Diploma, ITI படித்த ஆட்கள் 200 பேர் தேவை. கலந்துகொள்ள விரும்புவோர் 03-02-2025 காலை 10:30 மணிக்கு ராம்கோ ITI யில் நடைபெறும் நேர்முக தேர்வில் கலந்துகொள்ளலாம். வேலை தெரிந்தவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம்,ESI,EPF வசதி என ராம்கோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News February 1, 2025

உரிமம் இல்லாமல் விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை

image

விருதுநகர் மாவட்டத்தில் நெல் அறுவடையை தொடர்ந்து உளுந்து, பச்சை பயிறு, பருத்தி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். மேற்கண்ட பயிர்களுக்கு உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். உரிமம் இல்லாமல் அல்லது காலாவதியான உரிமத்துடன் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News January 31, 2025

கருத்து கேட்டு கூட்டம் நடத்த எதிர்பார்ப்பு

image

சிவகாசி மாநகராட்சியை விரிவாக்கம் செய்ய ஏதுவாக சிவகாசி மாநகராட்சியையொட்டி உள்ள ஆனையூர், தேவர்குளம், சாமிநத்தம், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், நாரணாபுரம், அனுப்பன்குளம், பள்ளப்பட்டி செங்கல நாச்சியார்புரம் ஆகிய கிராம பஞ்சாயத்துக்களையும் இணைத்தது. இதற்கு பல்வேறு கிராம ஊராட்சி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு கூட்டம் நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.

News January 31, 2025

துணை ராணுவத்தில் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியான கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் & ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள், 10ஆம் வகுப்பு தேர்ச்சி, ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம். உடற்தகுதி, திறன், எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு. பிப்.3ஆம் தேதிக்கு மேல் cisfrectt.cisf.gov.in ல் விண்ணப்பிக்கலாம். *ஷேர்

News January 31, 2025

இளம் தொழில்முறை வல்லுநர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

விருதுநகரில் மாவட்ட கண்காணிப்பு அலகில் பணிபுரிய இளம் தொழில்முறை வல்லுநர் (Young Professional) பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மாதம் ஊதியமாக ரூ.50,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://virudhunagar.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். *ஷேர்

News January 31, 2025

அன்புகரசின் அன்புக்கு கட்டுபடுவேன் – அமைச்சர்

image

காரியாபட்டி, பி.புதுப்பட்டி அரசு பள்ளி விழாவில் பள்ளிக்கு எவ்வாறு வருகிறீர்கள் என மாணவர்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாடினார் ‘நானும் ஆத்திகுளத்தில் இருந்து நடந்து தான் சார் பள்ளிக்கு வரேன் பஸ் வரவில்லை’ என்று தெரிவித்த சிறுவன் அன்புக்கரசுவிடம் ‘உன்னுடைய அன்புக்கு கட்டுப்பட்டு உங்க ஊருக்கு பஸ் விடுறேன். பஸ் விட்டதும் உன்னை தான் முதலில் ஏற்றி விடுவோம்’ அமைச்சர் என்று பேசினார்.

News January 30, 2025

சேத்தூர் காவல் ஆய்வாளர் டிஎஸ்பியாக பதவி உயர்வு

image

தமிழகத்தில் 83 காவல் ஆய்வாளர்கள் டிஎஸ்பி களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதில் ராஜபாளையம் அருகே சேத்தூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றிவரும் சார்லஸ் என்பவர் கடலூர் மாவட்ட டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு சக காவலர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!