Virudunagar

News March 15, 2026

விருதுநகர்: VOTER ID-க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

விருதுநகர் மக்களே, உங்கள் VOTER ID மிகவும் பழையதாகவும், மோசமான நிலைமையிலும் இருக்கும் பட்சத்தில் அதனை புதிதாக மாற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது.

1). <>இங்கு க்ளிக்<<>> செய்து மொபைல் எண்ணை உள்ளிடுங்கள்.
2). 1-ஐ தேர்ந்தெடுங்கள்.
3). உங்க VOTERID எண்ணை பதிவிடுங்கள்.
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க!

News March 15, 2026

விருதுநகர் : சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

விருதுநகர் மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.

1 இங்கு <>க்ளிக்<<>> செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க

2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க

3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க

4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.

விண்ணப்ப நிலையை 7845252525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணுங்க..

News March 15, 2026

விருதுநகர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவர்

image

சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே இருந்த பெட்டிக்கடையில் சாக்லேட் வாங்க சென்றுள்ளார். கடைக்காரர் சக்திவேல்(65) என்பவர் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சிறுமி தன் தாயாரிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் தாயார் சக்திவேலிடம் சென்று கேட்டபோது அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து சாத்தூர் மகளிர் போலீஸார் சக்திவேலை கைது செய்துள்ளனர்.

News March 15, 2026

கே.டி.ஆர்.வழக்கு விசாரணை மார்ச்.27 க்கு ஒத்திவைப்பு

image

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான வழக்கு விசாரணையை மார்ச்.27-ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

News March 15, 2026

கே.டி.ஆர்.வழக்கு விசாரணை மார்ச்.27 க்கு ஒத்திவைப்பு

image

பண மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் ஶ்ரீவி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்ய கோரி குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனு மீதான வழக்கு விசாரணையை மார்ச்.27-ம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

News March 14, 2026

சாத்தூர்: வீட்டில் பட்டாசு தயாரிப்பு – அதிர்ச்சி

image

சாத்துார் அருகே வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் சோலையப்பன்(47). இவரது வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக ஏழாயிரம்பண்ணை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு அதிரடியாக சோதனை நடத்திய போது அங்கு 15 ஷாட் பேன்சிரக பட்டாசு தயாரித்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் 10 பேன்சிரக பட்டாசு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த நிலையில் சோலையப்பனை கைது செய்தனர்.

News March 14, 2026

விருதுநகர்: Ex.ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் மூவர் கைது

image

விருதுநகர் – மல்லாங்கிணறு சாலையில் வரலொட்டிக்கு பைக்கில் சென்ற முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதியை வில்லிபத்திரி அருகே மர்ம நபர்கள் கடந்த 10-ம் தேதி இரவு வெட்டி கொலை செய்தனர். இச்சம்பவத்தில் வரலொட்டியை சேர்ந்த மணிகண்டன், மல்லாங்கிணறு இருளப்பன், ராஜா ஆகிய மூவரையும் மல்லாங்கிணறு காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வலை வீசி தேடி வருகின்றனர்.

News March 14, 2026

விருதுநகர்: நிலம் வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு

image

விருதுநகர் மக்களே நிலம் வாங்க விற்க உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு யோசனை நீங்கள் வாங்கும் நிலத்தின் முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் பார்க்க எளிய வழி உள்ளது. <>இங்கு கிளிக்<<>> செய்து புல எண் மற்றும் உட்பிரிவு எண்களை உள்ளிட்டு, உரிய கட்டணத்தைச் செலுத்திப் பழைய உரிமையாளர் மாற்றங்கள் குறித்த ஆவணத்தை தாங்களே டவுன்லோட் செய்து போலி பட்டாக்களை கண்டறியலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 14, 2026

விருதுநகர்: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

image

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, ​SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

News March 14, 2026

விருதுநகர்: பெண்ணை மிரட்டி ரூ.80 லட்சம் பறிப்பு; போலீஸ் கைது.!

image

விருதுநகர், ஆமாத்தூரைச் சேர்ந்த ஏட்டு சுந்தர்ராஜ் (35) என்பவர், விருதுநகரைச் சேர்ந்த கணவரை இழந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாரத்தை கூறி பெண்ணுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். மேலும் அவரது மகளை டாக்டருக்கு படிக்க வைப்பதாக கூறி ரூ.80 லட்சம் வரை பெற்று மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரில் சுந்தர்ராஜ் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!