Virudunagar

News February 5, 2025

முன்னாள் படை வீரர்களுக்கு காக்கும் கரங்கள் திட்டம்

image

இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்திடவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், “முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் மூலம் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் தொழில் தொடங்குவதற்காக மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். இதற்கு விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல இணை இயக்குநர் அலுவகத்தினை தொடர்பு கொள்ளவும்.

News February 4, 2025

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

மணல் மற்றும் இதர கனிமங்கள் வெட்டி எடுப்பது மற்றும் எடுத்துச்செல்வது, அதைத் தடுக்க முற்படும் அரசு அலுவலர்களை அச்சுறுத்துவது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட குற்றவியல் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.

News February 4, 2025

லாரி பின் சக்கரத்தில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

image

விருதுநகர் அருகே மல்லாங்கிணறு அழகர்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (35). இவரின் எட்டு வயது மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இந்நிலையில், நேற்று மதியம் அரசு மருத்துவமனை அருகே உள்ள சாலையில் சீனிவாசன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி சீனிவாசன் உயிரிழந்தார். 

News February 4, 2025

நம்ம ஊர் நம்ம கோவில்

image

சிவபெருமானின் தேவாரப் பாடல் பெற்ற 274 ஆலயங்களில் 202வது ஆலயமாக திருச்சுழி திருமேனிநாதர் கோவில் விளங்குகிறது. பழமையான இந்த ஆலயத்தில் அம்பாள் திரிபங்கி லட்சண அமைப்பில், இடுப்பு, கழுத்து, இடது கால் போன்றவற்றை சற்றே சாய்த்து நடன அமைப்பில் தரிசனம் தருகிறாள். இத்தல இறைவனை சிவராத்திரி அன்று,ஒரு வில்வ இலை கொண்டு அர்ச்சித்தால், உலகம் முழுவதும் உள்ள அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும்.

News February 4, 2025

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி

image

ஸ்ரீவி பகுதியை சேர்ந்த ஜெயமாலா என்பவரிடம் கீழராஜகுலராமனை சேர்ந்த ஆனந்த், சாந்தி தம்பதியினர் ராஜபாளையத்தில் துப்புரவு பணியாளர்களை கணக்கெடுக்கும்அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதை நம்பி அவர் முதலில் ரூ.40,000 கொடுத்த நிலையில் பின் 5 பவுன் நகைகளை அடமானம் வைத்து ரூ.2 லட்சம் செலுத்தியுள்ளனர். பின் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் ராஜபாளையம் காவல் நிலையத்தில் ஆனந்த், சாந்தி மீது புகார் அளித்துள்ளார்.

News February 3, 2025

விருதுநகரில் தயார் நிலையில் 17 சேமிப்பு கிட்டங்கிகள்

image

விருதுநகர் மாவட்டத்தில் 17 ,800 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 17 சேமிப்பு கிட்டங்கிகள் வேளாண் விளைபொருட்களை இருப்பு வைக்க தயார் நிலையில் உள்ளது. இதில் 6 மாதம் வரை இருப்பு வைத்து கொள்ளும் நிலையில் 15 நாட்கள் வரை வாடகை வசூலிக்கப்படுவதில்லை. விவசாயிகள் தாங்கள் விளைவித்த விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூட கிட்டங்கிகளில் இருப்பு வைத்து பயன்பெறலாம் என விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி தெரிவித்துள்ளார்.

News February 3, 2025

விருதுநகர் மாவட்டத்தில் பத்திரப்பதிவு நடைபெறவில்லை

image

தமிழ்நாடு அரசு பத்திர பதிவுத்துறை நேற்று முகூர்த்த நாளாக இருப்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்தது. மேலும் அலுவலர்களுக்கு மாற்று விடுமுறை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 16 பத்திரப்பதிவு அலுவலகங்களில் கீழராஜகுலராமன் பத்திரப்பதிவு அலுவலகம் மட்டுமே திறந்த நிலையில் பத்திரப்பதிவு எதுவும் நடைபெறவில்லை எனக் கூறப்படுகின்றது.

News February 3, 2025

விருதுநகர் மாவட்ட பெண்களின் கவனத்திற்கு

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் குடும்ப வன்முறைகள் 179, வரதட்சணை கொடுமைகள் 11, பாலியல் துன்புறுத்தல்கள் 10, குழந்தை திருமணங்கள் 150, திருமணத்தை தாண்டி உறவால் தகராறு 68, கட்டாய திருமணம் 31 என்ற வகைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. குடும்ப வன்முறைகள், பெண்களுக்கு பணியிடங்களில் ஏதேனும் பாதிப்பு இருந்தால் 181 இல் புகார் அளிக்கலாம் என மாவட்ட சமூக நல அலுவலர் ஷீலா சுந்தரி தெரிவித்துள்ளார்.

News February 3, 2025

சிவகாசியில் சிவராத்திரி விழாவிற்கு அழைப்பு

image

சிவராத்திரியை முன்னிட்டு சிவகாசியில் ஈஷா நடத்தும் “மஹாசிவராத்திரி ஈசனுடன் ஓர் இரவு” நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 26ம் தேதி நடைபெற உள்ளது. மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெற உள்ள இந்த நிகழ்வு சிவகாசி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகே உள்ள சிவகாசி முஸ்லீம் வர்த்தக சங்க மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 3, 2025

கயிறு தயாரித்த பெண்ணிற்கு கண்பார்வை இழப்பு

image

வத்திராயிருப்பு ,கோட்டையூரைச் சேர்ந்தவர் காளீஸ்வரி. இவர் தம்பிபட்டி -மாவூத்து சாலையில் கயிறு தொழிற்சாலையில் கூடை பின்னும் வேலை செய்து வந்துள்ளார். நிர்வாகத்தின் நிர்பந்தம் காரணமாக, அதிக உற்பத்தி கொடுக்க சொன்னதன் பேரில் கூடை பின்னி கொண்டிருந்தபோது காளீஸ்வரி கண்ணில் கயிறு பட்டதால் கண்பார்வை இழந்துள்ளார்.வத்திராயிருப்பு போலீசார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!