India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டூர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குனேரி ஆகிய 4 சுங்கச் சாவடிகளில் வரும் 10ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி நிலுவைத் தொகையை செலுத்தாததால், மேற்கண்ட 4 சுங்கச்சாவடி நிறுவனங்கள் தொடந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக ரூ.11,100 – ரூ.35,100 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்காக விண்ணப்பங்கள் விருதுநகர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ம.தி.மு.க., சார்பில் நெல்லை மண்டல அளவிலான செயற்குழு கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் தனியார் திருமண மஹாலில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வைகோ மற்றும் மதிமுக கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட ஏராளமான மதிமுக நெல்லை மண்டலத்துக்குட்பட்ட நிர்வாகிகள். மாவட்ட செயலாளர் கலந்து கொள்ள உள்ளனர்.

சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் பட்டாசு தொழிலாளி சங்கர்(24). காதல் விவகாரம் தொடர்பாக நேற்று மாலை இவரை ஒரு கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக ஓட ஓட வெட்டியத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் கோவில்பட்டியை சேர்ந்த விஜயபாண்டி(23), ராஜபாண்டி(24), அபி(25) ஆகியோரை கைது செய்து மற்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 காரீப் பருவத்தில் சோளம், பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, பருத்தி, தோட்டக்கலைப் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார். பயிர்களுக்கான காப்பீட்டை அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி பயன்பெறலாம்.

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கங்கரக்கோட்டையில் விதிமீறல் இருந்ததாக சீல் வைக்கப்பட்ட பால்பாண்டியன் (45) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு உற்பத்தி செய்ததாக ஆலைக்கு மீண்டும் சீல் வைக்கப்பட்டது. இதேபோல் சேர்வைக்காரன்பட்டியில் விதியை மீறிய பட்டாசு ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதேபோல் சட்டவிரோத பட்டாசு தயாரிப்பு பற்றி 9443967578 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலை வெடி விபத்துக்களை தடுக்க ஆய்வு குழு அமைக்கப்பட்டு பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆய்வு செய்யப்படும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஆய்வு குழு லஞ்சம் பெறப்படுவதாகவும், எந்தெந்த துறை அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் வழங்கப்படுகிறது என்பது குறித்தான பட்டியல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் வருவாய் துறை இணைந்து நாளை(ஜூலை.9) காலை 10 மணிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் முன்னோர்களின் பெயரில் உள்ள பட்டா மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இதில் கலந்து பாட்டாக்களை தங்கள் பெயரில் மாற்றிக்கொள்ளலாம் என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பணி புரிந்து வரும் ரமேஷ் பாபு என்ற மருத்துவரை அவரது தனியார் மருத்துவமனை முன்பு கத்தியால் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ரமேஷ் பாபு காயமடைந்தார். உடனடியாக ரமேஷ் பாபுவை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்த கங்காதரன் என்பவர் 2 வருடங்களுக்கு முன்பு பிரபல மரக்கார் பிரியாணி கடை நடத்தி வருவதாகவும், அதற்கு கிளை திறக்க உள்ளதாக கவர்ச்சியாக விளம்பரம் செய்துள்ளார். இதை பார்த்து தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பண்டிச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்த 239 பேரிடம் ரூ.25 கோடி வரை மோசடி செய்தார். இதில் கங்காதரனை இன்று விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.