India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வண்ணம் விருதுநகரில் அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விருதுநகர் நகராட்சி மற்றும் வட்டார பகுதிகளில் கடந்த ஆண்டில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட அச்சகங்களில் காலண்டர் உற்பத்தி, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கி இரவு, பகலாக விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் மூலம் சுமார் ரூ.400 கோடிக்கு உற்பத்தி நடந்து இருந்ததாக காலண்டர் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். 2025ஆம் ஆண்டுக்கான தினசரி, மாத காலண்டர் தயாரிக்கும் பணிகள் கடந்த வாரம் விறுவிறுப்பாக நடைபெற்றன. *ஷேர்*
சிவகாசியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.அப்போது பள்ளப்பட்டி சாலையில் இயங்கி வரும் பாலிபேக் நிறுவனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பது கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி மாநகராட்சி உரிமம் இல்லாமல் அந்த நிறுவனம் செயல்பட்டு வந்ததும் தெரியவந்ததால், அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு ரூ.25,000 அபராதம் விதித்தனர்.
தமிழ்நாட்டில் 16 மாநகராட்சிகள் எல்லை விரிவாக்கம் செய்வதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சிவகாசி மாநகராட்சி எல்லை விரிவாக்கத்திற்காக ஆனையூர், சித்துராஜபுரம், நாரணாபுரம், விஸ்வநாதம், பள்ளப்பட்டி, செங்கமலநாச்சியார்புரம், அனுப்பன்குளம், சாமிநத்தம், தேவர்குளம் ஆகிய 9 கிராம ஊராட்சிகள் சிவகாசி மாநகராட்சியுடன் இனிய உள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்ரீவி.ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத நீராட்ட விழாவில் பகல் பத்து உற்சவம் நேற்று தொடங்கியது.2 ஆம் நாளான இன்று ஆண்டாள் ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் வடபத்ரசாயி சந்நிதி முன் உள்ள கோபால விலாசம் என்னும் பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார்ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் மற்றும் பெரியாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களுக்கு விசேஷ திருமஞ்சனம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தைத்திங்கள் தமிழர் மாதத்தையொட்டி தமிழ், தமிழர், தமிழ்நாடு – பண்பாடும் பெருமைகளும் என்ற தலைப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு ஓவிய போட்டிகள் நடைபெற உள்ளது. அருப்புக்கோட்டை அல் அமீன் பள்ளி, சிவகாசி எஸ்.ஹெச்.என்.வி மெட்ரிக் பள்ளியில் ஜன.4 அன்று காலை 10 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு 93616 13548, 86675 73086 இல் தொடர்பு கொள்ளலாம்.
சாத்தூர் அருகே கொம் மங்கியாபுரத்தைச் சேர்ந்தவர் முதல் பட்டதாரி ரேணுகா. 2 பெண் குழந்தைகளுக்கு தாயான இவர் தமிழ்நாடு காவல்துறையில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இக்கிராமத்தில் இருந்து முதல் பெண் காவலர் என்ற பெருமையுடன் விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஜீப் ஓட்டும் ஒரே பெண் டிரைவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். நம்ம ஊர் பெண்ணுக்கு வாழ்த்துக்களை CONNENT இல் தெரிவிக்கலாம்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று ஆண்டாள், ரங்கமன்னருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து ஆண்டாள்,ரங்கமன்னார் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ராஜபாளையம் உழவர் சந்தையில் ஜனவரி 1ம்தேதி இன்றைய காய்கறிவிலை நிலவரம் கத்தரிக்காய் ரூ.70, வெண்டைக்காய் ரூ.25, தக்காளி கிலோ ரூ.25, அவரைக்காய் ரூ. 140.சேனைக்கிழங்குகிலோ ரூ70, கருணைக்கிழங்கு ரூ70. வெங்காயம் ரூ.80, கேரட் ரூ.62, முருங்கை பீன்ஸ் ரூ 90.பட்டர் பீன்ஸ் ரூ.240, பச்சை பட்டாணி ரூ160, பீட்ரூட் ரூ70, உருளைக்கிழங்கு ரூ.50 உழவர் சந்தையில் விற்கப்பட்டு வருகிறது.
விருதுநகர், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் 16 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் 2,700க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சுடுமண்ணால் ஆன நீள்வட்டம், கூம்பு வடிவம், அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காய்கள் கண்டறியப்பட்டன. அல்லிமொட்டு வடிவ ஆட்டக்காயில், தயாரித்தவர்களின் கைரேகை பதிவாகி நிலையில் கிடைப்பது அரிது என தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். *ஷேர்
Sorry, no posts matched your criteria.