India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விருதுநகர் மாவட்டத்தில் ‘ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டத்தின் கீழ் தக்காளி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரை, கீரை வகைகள் போன்ற 6 வகையான விதைகள் அடங்கிய தொகுப்பு 100% மானியத்தில் ரூ.60 வீதம் 41,500 எண்கள் வழங்கப்பட உள்ளது. இதேபோல் பப்பாளி, கொய்யா, எலுமிச்சை பழச்செடித் தொகுப்பு 100% மானியத்தில் 25,850 எண்கள் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உழவன் செயலியில் பதிவு செய்யலாம்.

’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பேரில் தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக நாளை(ஆக.7) ராஜபாளையம் வர உள்ளார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு காலநிலை மாற்றத்தால் உடல் சோர்வு, தொண்டைவலி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே உடல்நலனை கருதி ராஜபாளையத்தில் நாளை காலை பங்கேற்க இருந்த உள்அரங்கு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

▶️ஆமத்தூர்
▶️மாரனேரி
▶️எம்.புதுப்பட்டி
▶️மல்லாங்கிணர்
▶️பந்தல்குடி
▶️கீழராஜகுலராமன்
▶️சாத்தூர் தாலுகா
▶️அம்மாபட்டி – அப்பைநாயக்கன்பட்டி இணைப்பு
▶️ஏழாயிரம்பண்ணை
▶️ஆலங்குளம்
▶️மம்சாபுரம் – வன்னியம்பட்டி
▶️ஸ்ரீவி டவுன்- தலுகா
▶️நத்தம்பட்டி – கூமாபட்டி
▶️எம்.ரெட்டியாபட்டி – பரளச்சி
▶️நரிக்குடி – ஏ.முக்குளம்
▶️வீரசோழன் – கட்டனூர்

புதுதில்லி நிதி ஆயோக் அமைப்பால் நடத்தப்பட்ட முழு நிறைவு திட்ட இயக்கத்தில் முன்னேற விழையும் மாவட்டம் மற்றும் முன்னேற விழையும் வட்டாரம் திட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்ட ஆறு குறியீடுகளையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் 100% நிறைவு செய்தமைக்காக மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பால் நமது மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 2 தங்கப் பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மாவட்ட அமைச்சர்களிடம் காண்பித்தார்.

சங்கரன்கோவிலை சேர்ந்த கங்காதரன் ராஜபாளையத்தை தலைமையிடமாக வைத்து மரக்கார் பிரியாணி கடையின் கிளை உரிமம் தருவதாகவும், மாதம் ரூ.50,000 லாபம் பெறலாம் என தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த 239 பேரிடம் ரூ.12 கோடி பெற்று மோசடி செய்து ஜூலை.7 அன்று சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது இவர் பொருளாதார குற்றத்தில் ஈடுபட்டதாக தமிழகத்திலேயே முதல் முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

SBI வங்கியில் Junior Associates பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் 5,180 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு எந்த டிகிரி முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.24,050 முதல் 64,480 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இன்று (ஆக.06) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆக.26. இந்த <

விருதுநகர் மக்களே.. தமிழ்நாடு அரசு வழக்காடல் துறையில் Office Assistant பதவிக்கு காலியாக உள்ள 16 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பதவிக்கு 23.07.25 முதல் 14.08.25க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு 15,700 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த <

சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலப் பணிகள் துவங்கி ஓராண்டாகியுள்ள நிலையில் தற்போது பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரூ.62 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கிய இப்பணி விறுவிறுப்பாக நடைபெற துவங்கி தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.

சிவகாசி, வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழை காரணமாக பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டு வருவது உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பிற்பகல் வரை வெயில் அடித்தாலும் பிற்பகலை தொடர்ந்து மழை பெய்து வருவதால் உற்பத்தி பாதித்துள்ளது.

சிவகாசி பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஸ்ரீ துர்க்கை பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று ஆடிமாதம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஸ்ரீ வேப்பிலைக்காரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வேப்பிலையால் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றதை தொடர்ந்து கூழ் காய்ச்சி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.