India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் மூலம் ஐந்து லட்சத்து 66 ஆயிரத்து 182 குடும்ப அட்டைகள், நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 34 ஆயிரத்து 793 குடும்ப அட்டைகள், இலங்கைத் தமிழர் முகாமில் 1061 குடும்ப அட்டைகள் என மொத்தம் ஆறு லட்சத்து 2,036 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதற்கான பணிகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மற்றும் சில்லறை சில்லறை விற்பனைக் கடைகள் திருவள்ளுவர் தினமான ஜன.15 மற்றும் குடியரசு தினமான ஜன.26 அன்று தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவி மடவார் வளாகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இதில் 17 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் கொண்ட நெல் மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. சன்ன ரக நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு அரசு ஊக்கத்தொகை உடன் ரூ. 24.50,மோட்டா ரக நெல்லுக்கு ரூ.24.05 வழங்கப்படுகிறது. நெல் கொள்முதலுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தபடும் செலுத்தபடும்.
சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, கணினி அறிவியல் துறை சார்பாக மாநில அளவில், கல்லூரிகளுக்கு இடையேயான வினாடி-வினா போட்டி இன்று நடைபெற்றது. மென்பொருள் சந்தைபடுத்துதல், தொழில்நுட்ப பயனர் இடைமுகம், வழுநீக்கல், மின் கழிவில் பொருட்கள் வடிவமைத்தல், புதையல் வேட்டை ஆகிய போட்டிகள் நடைபெற்றன. 8 கல்லூரிகளைச் சேர்ந்த 171 மாணவர்கள் பங்கேற்ற போட்டியில் வி.இ.நா.செந்திக்குமார நாடார் கல்லூரி அணி வெற்றி பெற்றது
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி மற்றும் திருவனந்தபுரம் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IISER) கணிதப் பள்ளியுடன் இணைந்து தேசிய அளவிலான கணிதத் திறன் மேம்பாட்டு பயிற்சி கருத்தரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவனந்தபுரம் IISER-இன் இணை பேராசிரியர் டாக்டர் ஸ்ரீலசஷ்மி கிருஷ்ணமூர்த்தி மற்றும் ANJAC நிர்வாகத்தினர் நிதியுதவி அளித்தனர்.
போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், துணிகள், ரப்பர் பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து காற்றின் தரத்தைப் பாதுகாத்து, சுற்றுச்சூழலைக் காத்திட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், துணிகள், ரப்பர் பொருட்களை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது. இதனால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதைத் தவிர்த்து காற்றின் தரத்தைப் பாதுகாத்து, சுற்றுச்சூழலைக் காத்திட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்தாண்டு 4579 பிரசவங்கள் நடந்துள்ளது. இதில் 2341 ஆண் , 2065 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளது. இதில் 66 இரட்டையர்கள், ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளும் பிறந்துள்ளது. ஏப்ரல் 2023 – மார்ச் 2024 காலகட்டத்தில் 7,991 பிரசவங்களில், ஒரு பிரசவகால உயிரிழப்பும் பதிவாகவில்லை. இதன் மூலம் விருதுநகர் தமிழ்நாட்டில் பேறுகால சுகாதாரத்தில் சாதனையைப் புரிந்துள்ளது. *ஷேர்*
சிவகாசி, திருவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, விருதுநகரில் அறிவுசார் மையங்கள் அமைந்துள்ளன.குறைந்த கட்டணத்தில் தன்னார்வலர்கள், அறக்கட்டளைகள் வாயிலாக நடத்தப்படும் போட்டி தேர்வு கருத்தரங்கு, இலக்கிய கூட்டங்கள், கல்வி அறிவுசார்ந்த போட்டிகள், சிறு விழாக்கள் மாலை நேரங்களில் மட்டும் நடத்திட அனுமதிக்கப்படும். மேலும் முன்பதிவு மற்றும் இதர விபரங்களுக்கு அந்தந்த பகுதி ஆணையாளரை தொடர்பு கொள்ளலாம்.
வெம்பக்கோட்டையில் கடந்த ஜூன் 18ஆம் தேதி முதல் 3ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை மூன்றாம் கட்ட அகழ்வாய்வில் 17 அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு சுமார் 2900 தொல்பொருட்கள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் தற்போது 18 ஆவது அகழாய்வு குழிகள் தோண்டப்பட்டு அவற்றில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அரிய வகை தொல்பொருள்கள் கிடைக்கும் என தொல்லியல் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.