India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகரில் மாவட்ட கண்காணிப்பு அலகில் பணிபுரிய இளம் தொழில்முறை வல்லுநர் (Young Professional) பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மாதம் ஊதியமாக ரூ.50,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://virudhunagar.nic.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். *ஷேர்
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் 1 பணியிடமும்(மாத ஊதியம் ரூ.27804) , சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூகப்பணியாளர்கள் 2 பணியிடங்களும்(மாத ஊதியம் ரூ.18536) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.virudhunagar.nic.in லிருந்து விண்ணப்பதை பதிவிறக்கம் செய்து ஜன.27 க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்ப வேண்டும். *ஷேர்*
தாட்கோ மூலமாக 12 ஆம் வகுப்பு அல்லது பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. பயிற்சி முடிந்த பிறகு ரூ.20,000 முதல் ரூ.22,000 வரை ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக வேலை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் www.tahdco.com மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
ராஜபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் 50, முன்னாள் ராணுவ வீரர். இவர் தென்காசியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்த போது அங்கு மிலிட்டரி கேண்டீன் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக தென்காசி போலீசார் கைது செய்தனர். ராஜபாளையத்தில் உள்ள அவர் வீட்டில் சோதனை செய்தபோது அவரது மனைவி மணிமேகலை 42, யும் விற்றது தெரிந்தது.மதுவிலக்கு போலீசார் அவரையும் கைது செய்து வீட்டிலிருந்த 153 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மாநில அளவிலான இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு 31.01.2025 மற்றும் 01.02.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான இந்த மாநாடு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் மேற்குறிப்பிட்ட தேதியில் நடைபெற இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் குடும்பத்துடன் கலந்து கொண்டார். பின்னர் அரசு ஊழியர்கள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய உடை அணிந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.
விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருந்துடன் விருதுநகர் கார்னிவல் 2025 என்ற தலைப்பில் இசையுடன் கூடிய உணவு திருவிழா ஜன.17, 18 அன்று நடைபெற உள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதேச உணவுகள், பொழுது போக்கு அம்சமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் யூ – டியூப் பிரபலங்கள், சூப்பர் சிங்கர்ஸ் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் ஜெயசீலன் அழைப்பு விடுத்துள்ளார்.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப தூப ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி நீராட்ட விழாவில் கடந்த 31ஆம் தேதி பச்சை பரப்புதல் வைபவத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதில் 6ஆம் நாளான இன்று காலை ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் 1 பணியிடமும்(மாத ஊதியம் ரூ.27,804), சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூகப்பணியாளர்கள் 2 பணியிடங்களும்(மாத ஊதியம் ரூ.18536) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.virudhunagar.nic.in லிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜன.27 க்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
Sorry, no posts matched your criteria.